மான் விழி போல அந்த
மங்கையும் காணுகின்றாள்..!
தேன் நிலா வெளிச்சத்தில் நான்
தேவதை கண்டேன், அங்கே
கூன் பிறை நெற்றியின் கீழ்
குளிர் பார்வை வீசக் கண்டேன் ..
வீணாக நேரம் செல்ல
விடவில்லை சூழல் என்னை,
அருகினில் நெருங்கி விட்டேன்
ஆனாலும் முடியவில்லை ...
ஒருவித தயக்கம் எங்கள்
உணர்ச்சியை தடுத்து நிற்க ,
இருவரும் ஏக்கத்தோடு
இணைவிழிப் பார்வையாலே
ஒருவரை ஒருவர் தின்ன
ஒப்புதல் வழங்கி விட்டோம் ..!