ஒவ்வொரு முறையும் கேட்கிறாய்..!

ஒவ்வொரு முறையும் கேட்கிறாய்..!
என்னை உனக்குப் பிடிக்கிறதா என்று…
கோடி முறைகள் சொல்லிவிட்டேன்,
உன்னை மட்டுமே பிடிக்குமென்று..!

இது சந்தேகமா..? - இல்லை, 
இதில் உனக்கு
ஏதோ ஒரு சந்தோஷமா…?

ஒவ்வொரு முறையும் கேட்கிறாய்..!
என்னை உனக்குப் பிடிக்கிறதா என்று…
கோடி முறைகள் சொல்லிவிட்டேன்,
உன்னை மட்டுமே பிடிக்குமென்று..!

நீ கேட்பதை மட்டும் நிறுத்தவில்லை.
நான் பதிலையும் இதுவரை மாற்றவில்லை.
நீ மீண்டும் மீண்டும் கேட்கிறாய்..!
நான் மீண்டும் மீண்டும் சொல்கிறேன்…!
உன் ஒருத்தியை  மட்டுமே பிடிக்குமென்று..!

இது சந்தேகமா..? - இல்லை, 
இதில் உனக்கு
ஏதோ ஒரு சந்தோஷமா…

பதினேழு வருடங்கள் கடந்தது
பல்வேறு விஷயங்கள் மறந்தது
இந்தக் கேள்வி மட்டுமே மறக்கவில்லை
நம் காதலின் ஜீவனோ இறக்கவில்லை
மீண்டும் மீண்டும் கேட்கிறாய் - நான்
மீண்டும் மீண்டும் சொல்கிறேன்
உன்னை மட்டுமே பிடிக்கும் என்று

இது சந்தேகமா..? - இல்லை, 
இதில் உனக்கு
ஏதோ ஒரு சந்தோஷமா…





Sumankavi

சாவி தயாரிப்பவன்

Previous Post Next Post

Contact Form