விழிகளின் போதையில் விழுந்துவிட்டேன்..!

விழிகளின் போதையில் விழுந்து விட்டேன் - உன்
விழிகளின் போதையில் விழுந்து விட்டேன்..!
மதுவின் போதையோ தெளிந்து விடும் - உன்
பார்வையின் போதையோ தெளியவில்லை…

அதனால்…

விழிகளின் போதையில் விழுந்து விட்டேன் - உன்
விழிகளின் போதையில் விழுந்து விட்டேன்…
போதைப் பழக்கமே அற்றவன் நான் - உன் 
பார்வையின் போதையால் கெட்டவன் நான்..
மதுவை சில பேர் அருந்தினர் - உன்
விழியோ என்னை அருந்தின..!
போதைப் பழக்கமே அற்றவன் நான்
உன் பார்வையின் போதையால் கெட்டவன் நான்…

விழிகளின் போதையில் விழுந்து விட்டேன் - இன்று உன்
விழிகளின் போதையில் விழுந்து விட்டேன்…

மீண்டு வரவும் முடியவில்லை
மீண்டும் தெளிய விருப்பமில்லை
ராஜ போதையில் மிதக்கிறேன் - நான்
ராஜ போதையில் மிதக்கிறேன்
ஆயிரம் பார்வைகள் கடந்து வந்தேன் - உன் 
ஒருத்தியின் பார்வையில் விழுந்து விட்டேன்..!
ஜீவனை உருக்கும் பார்வை இது - என்
ஆயுளை நீட்டும் பார்வை இது,
மதுவின் போதையோ தெளிந்து விடும் - உன
பார்வையின் போதையோ தெளியவில்லை..!

என்னை மறந்து,
சுயநினை விழந்து,
உன்னில் கலந்து,
உயிரில் கரைந்து,

விழிகளின் போதையில் விழுந்து விட்டேன் - உன்
விழிகளின் போதையில் விழுந்து விட்டேன்.





Sumankavi

சாவி தயாரிப்பவன்

Previous Post Next Post

Contact Form