அதிகாலை வெய்யில் வெளிச்சம்..!

அதிகாலை வெய்யில் வெளிச்சம்
மெதுவாக என்னை எழுப்பும்
அசைந்தாடும் இலையின் மீது
பனித்துளிகள் ஓய்வு எடுக்கும்
இயந்திர ஓசையில்லா
இனிய நற்காலை இது
பறவைகள் பாடல் மட்டும்
ஒலிக்கின்ற வேளை இது

அதிகாலை வெய்யில் வெளிச்சம்
மெதுவாக என்னை எழுப்பும்

என்னதான் சொல்வேன் அந்த
இதமான அனுபவத்தை
தென்னையின் கீற்றின் வழியே
தெரிகின்ற ஒளியை போல
மனதுக்குள் மின்னுகின்ற
பழைய நாள் அனுபவத்தை
பகிரவே ஆசை கொண்டேன்
படம் போல காணுகின்றேன்
பைக்குகள் ஓசை இல்லை
ஹாரன்கள் ஒலிக்கவில்லை
ஓசையில் கூட அங்கே
கலப்படம் இருக்க வில்லை..!

அதிகாலை வெய்யில் வெளிச்சம்
மெதுவாக என்னை எழுப்பும்
அசைந்தாடும் இலையின் மீது
பனித்துளிகள் ஓய்வு எடுக்கும்
இயந்திர ஓசையில்லா
இனிய நற்காலை இது
பறவைகள் பாடல் மட்டும்
ஒலிக்கின்ற வேளை இது

தொலைவிலே கேட்கும் இளைய
ராஜாவின் பாட்டுச் சத்தம்
புள்ளிகள் போட்டு வைத்த
கோலத்தில் அழகு முற்றம்
மரமெலாம் பூக்களாலே
அலங்காரம் செய்து நிற்கும்
மணியோசை எழுப்பிக் கொண்டு
போகின்ற வண்டிச் சத்தம்
இரைச்சல்கள் இல்லை அங்கே
இடைஞ்சல்கள் இல்லை அங்கே
நிம்மதி யான மனமும்
நிறைவான வாழ்வு மன்றி
குறையொன்றும் இருக்கவில்லை
இருதயம் கனக்கவில்லை

அதிகாலை வெய்யில் வெளிச்சம்
மெதுவாக என்னை எழுப்பும்
அசைந்தாடும் இலையின் மீது
பனித்துளிகள் ஓய்வு எடுக்கும்
இயந்திர ஓசையில்லா
இனிய நற்காலை இது
பறவைகள் பாடல் மட்டும்
ஒலிக்கின்ற வேளை இது

Sumankavi

சாவி தயாரிப்பவன்

Previous Post Next Post

Contact Form