புனிதபிம்பம் உடஞ்சு போச்சு..!

புனி தபிம்பம் உடஞ்சு போச்சு..!
நடிகன் வாழ்க்க நாறிப் போச்சு..!
தூயசக்தி மாறி இன்று,
துயரசக்தி யாகிப் போச்சு.... - மக்கள்
துரத்தும் கதி யாகிப்போச்சு....

புனிதபிம்பம் உடஞ்சு போச்சு..!
நடிகன் வாழ்க்க நாறிப் போச்சு... - ஆமா
நடிகன் வாழ்க்க நாறிப் போச்சு....

அஞ்சு நிமிசம் வந்தாப் போதும்,
ரெண்டு வார்த்தை சொன்னாப் போதும்
கழுதை கூட ஜெயிக்குமுன்னு,
கண்டபடி பேசினாங்க... - இன்று
காசை அள்ளி வீசுராங்க... - ஆமா
காசை அள்ளி வீசுராங்க...
தோல்விபயம் காரணமா,
தெருத்தெருவா போகுறாங்க ....- ஆமா
தெருத்தெருவா போகுறாங்க...

புனிதபிம்பம் உடஞ்சு போச்சு..!
நடிகன் வாழ்க்க நாறிப் போச்சு..!
தூயசக்தி மாறி இன்று,
துயரசக்தி யாகிப் போச்சு.... - மக்கள்
துரத்தும் கதி யாகிப்போச்சு....
துரத்தும் கதி யாகிப்போச்சு....

முருங்கக்கா பறிக்கிறதும்,
தொப்பி போட்டு நடிக்கிறதும்
ட்ராக்டர், வண்டி ஓட்டுறதும்
டீ வாங்கிக் குடிக்கிறதும்
மக்களெல்லாம் கேணயன்னு,
மனசுக்குள்ள நெனக்கிறதும்,
வெளிப்படையா தெரியுதைய்யா..! - ஒங்க
வேசமிப்ப கலையுதைய்யா..! -ஆமா
வேசமிப்ப கலையுதைய்யா..! -

புனிதபிம்பம் உடஞ்சு போச்சு..!
நடிகன் வாழ்க்க நாறிப் போச்சு..!
தூயசக்தி மாறி இன்று,
துயரசக்தி யாகிப் போச்சு.... - மக்கள்
துரத்தும் கதி யாகிப்போச்சு....
துரத்தும் கதி யாகிப்போச்சு....

Sumankavi

சாவி தயாரிப்பவன்

Previous Post Next Post

Contact Form