கால்கள் சிறியது... - நம்
பயணம் பெரியது..! - நண்பா..!
நம் கால்கள் சிறியது... - ஆனால்
பயணம் பெரியது...
தூரம் எதுவரை தெரியாது...
துணிவோ சிறிதும் குறையாது...
எடுத்த காரியம் முடியும் வரை,
உறக்கம் என்பது கிடையாது..! - விழியில்
உறக்கம் என்பது கிடையாது..!
வெற்றி என்பதே நம்இலக்கு...
தோல்விகள் இங்கே விதிவிலக்கு...
நாளை என்பது இருக்கும்வரை,
அயர்வும் சோர்வும் இனிஎதற்கு..? - சொல்
அயர்வும் சோர்வும் இனிஎதற்கு..?
கால்கள் சிறியது... - நம்
பயணம் பெரியது..! - நண்பா..!
நம் கால்கள் சிறியது... - ஆனால்
பயணம் பெரியது...
கடமையைச் செய்து கடந்துவிடு...
காலம் நிச்சயம் பரிசளிக்கும்..!
காலம் வருமென காத்திருந்தால்,
வாழ்வே உன்னை பரிகசிக்கும்... - உன்
வாழ்வே உன்னை பரிகசிக்கும்...
வென்றவர் தோற்றவர் என்பதெல்லாம்...
அன்றுடன் முடியும் கதையல்ல.
தோற்றவர் வெல்வதும்,
வென்றவர் தோற்பதும்,
காலத்தின் கைகளில் உள்ளதடா..! - எதிர்
காலத்தின் கைகளில் உள்ளதடா..!
கால்கள் சிறியது... - நம்
பயணம் பெரியது..!
விடியலை நோக்கி நடப்போம்..! - வா..!
துயர்களை மிதித்துக் கடப்போம்..! - நாம்
துயர்களை மிதித்துக் கடப்போம்..!
பயணம் பெரியது..! - நண்பா..!
நம் கால்கள் சிறியது... - ஆனால்
பயணம் பெரியது...
தூரம் எதுவரை தெரியாது...
துணிவோ சிறிதும் குறையாது...
எடுத்த காரியம் முடியும் வரை,
உறக்கம் என்பது கிடையாது..! - விழியில்
உறக்கம் என்பது கிடையாது..!
வெற்றி என்பதே நம்இலக்கு...
தோல்விகள் இங்கே விதிவிலக்கு...
நாளை என்பது இருக்கும்வரை,
அயர்வும் சோர்வும் இனிஎதற்கு..? - சொல்
அயர்வும் சோர்வும் இனிஎதற்கு..?
கால்கள் சிறியது... - நம்
பயணம் பெரியது..! - நண்பா..!
நம் கால்கள் சிறியது... - ஆனால்
பயணம் பெரியது...
கடமையைச் செய்து கடந்துவிடு...
காலம் நிச்சயம் பரிசளிக்கும்..!
காலம் வருமென காத்திருந்தால்,
வாழ்வே உன்னை பரிகசிக்கும்... - உன்
வாழ்வே உன்னை பரிகசிக்கும்...
வென்றவர் தோற்றவர் என்பதெல்லாம்...
அன்றுடன் முடியும் கதையல்ல.
தோற்றவர் வெல்வதும்,
வென்றவர் தோற்பதும்,
காலத்தின் கைகளில் உள்ளதடா..! - எதிர்
காலத்தின் கைகளில் உள்ளதடா..!
கால்கள் சிறியது... - நம்
பயணம் பெரியது..!
விடியலை நோக்கி நடப்போம்..! - வா..!
துயர்களை மிதித்துக் கடப்போம்..! - நாம்
துயர்களை மிதித்துக் கடப்போம்..!