தமிழ் நாட்டின் எதிர்காலம் என்னவாகுமோ...

தமிழ் நாட்டின் எதிர்காலம்
என்னவாகுமோ..? - அத
நெனச்சு நெனச்சு நெஞ்சமெல்லாம்
புண்ணாப் போகுதே..! - நண்பா
புண்ணாப் போகுதே..!

தமிழ் நாட்டின் எதிர்காலம்
என்னவாகுமோ..? - நம்ம
தமிழ் நாட்டின் எதிர்காலம்
என்னவாகுமோ..?

தற்க்குறிய தலையில் வச்சு கொண்டாடுறான்... - இவன்
தன்மானம் இழந்து தினம் திண்டாடுறான்..!
கரண்ட்டில்ல, தண்ணியில்ல, காசுமில்ல... - சூடு
சொரணையற்று வாழுறானே கூச்சமில்ல..? - இவன்
சொரணையற்று வாழுறானே கூச்சமில்ல..?
தொழில்துறையோ தூர்ந்து போச்சு...
விவசாயம் காஞ்சுபோச்சு...
உற்பத்தி கொறஞ்சுபோச்சு...
வாங்கும்திறன் சரிஞ்சுபோச்சு...
நெனச்சாலே நெஞ்சமெல்லாம் பதறுதடா..! - மக்கள்
நிம்மதியோ நாளுக்கு நாள் கொறையுதடா..! - நண்பா
நிம்மதியோ நாளுக்குநாள் கொறையுதடா..!

தமிழ் நாட்டின் எதிர்காலம்
என்னவாகுமோ..? - அத
நெனச்சு நெனச்சு நெஞ்சமெல்லாம்
புண்ணாப் போகுதே..! - நாடு
மண்ணாப் போகுதே..!

பெண்ணுக்குச் சொத்துரிமை கொடுத்த நாட்டிலே..!
அண்ணன் சீர் கொடுத்து நம்ம ஏமாத்துறான்...
கல்விநிதி கொறச்சுபுட்டான்,
கடன்சுமைய நெறச்சுபுட்டான்,
முதலீட்ட தவறவிட்டான்,
தொழிலாளிய பதறவிட்டான்,
முன்னேற்றத் திட்டமென்று எதுவுமில்ல - ஆட்சி,
நிர்வாகம் பற்றி துளி அறிவுமில்லை... - ஆமா
வளர்ந்து வந்த தமிழ்நாடு தேங்கிப் போனது. - அதல
பாதாளம் நோக்கி இப்ப பயணமானது...
அதனால்...

தமிழ் நாட்டின் எதிர்காலம்
என்னவாகுமோ..? - அத
நெனச்சு நெனச்சு நெஞ்சமெல்லாம்
புண்ணாப் போகுதே..! - நாடு
மண்ணாப் போகுதே..!

Sumankavi

சாவி தயாரிப்பவன்

Previous Post Next Post

Contact Form