மெழுகின் தலையில் தீயாய் நின்று,
அன்பே நீ எனை உருக்குகிறாய்..!
தென்றலைப் போல மெதுவாய் நுழைந்து,
வாலிப வேதனை பெருக்குகிறாய்..! - என்
வாலிப வேதனை பெருக்குகிறாய்..!
தகுமா..!
இது தகுமா..! - நீ
வாழ்வில் வந்தது
வரமா..? சாபமா..?
மெழுகின் தலையில் தீயாய் நின்று,
அன்பே நீ எனை உருக்குகிறாய்..!
அன்பே நீ எனை உருக்குகிறாய்..!
எனக்குள் நிகழும் மாற்றங்க ளெல்லாம்
உனக்குள் நிகழக் கூடுமா..?
இப்படியே நான் ஏங்கி ஏங்கி,
இழைத்தால் மட்டும் போதுமா..? - சொல்
இழைத்தால் மட்டும் போதுமா..?
சருகில் பற்றிய நெருப்பைப் போல
மனதில் பரவி எரிகின்றாய் - நான்
விழிகளை மூடிக் கிடந்தால் கூட
படமாய் நெஞ்சில் விரிகின்றாய்..? - நீ
படமாய் நெஞ்சில் விரிகின்றாய்..?
மெழுகின் தலையில் தீயாய் நின்று
அன்பே நீ எனை உருக்குகிறாய்..!
தென்றலைப் போல மெதுவாய் நுழைந்து
வாலிப வேதனை பெருக்குகிறாய்..! - என்
வாலிப வேதனை பெருக்குகிறாய்..!
அம்மா அழைப்பது கேட்கவில்லை. - என்
அருகிலிருப்பவர் தெரியவில்லை.
உள்ளும் புறமும் நீயிருந்தாய். - என்
உயிரிலும், உணர்விலும் நீயிருந்தாய்.
தரிகெட்டுத் தவிக்குது என்மனசு. - உனை
தழுவிடத் துடிக்குது என்வயசு.
ஒவ்வொரு நொடியும் கரைகிறது. - நீ
இல்லாமல் விழிகள் நிறைகிறது..! - நீ
இல்லாமல் விழிகள் நிறைகிறது..!
மெழுகின் தலையில் தீயாய் நின்று
அன்பே நீ எனை உருக்குகிறாய்..!
தென்றலைப் போல மெதுவாய் நுழைந்து
வாலிப வேதனை பெருக்குகிறாய்..! - என்
வாலிப வேதனை பெருக்குகிறாய்..!
அன்பே நீ எனை உருக்குகிறாய்..!
தென்றலைப் போல மெதுவாய் நுழைந்து,
வாலிப வேதனை பெருக்குகிறாய்..! - என்
வாலிப வேதனை பெருக்குகிறாய்..!
தகுமா..!
இது தகுமா..! - நீ
வாழ்வில் வந்தது
வரமா..? சாபமா..?
மெழுகின் தலையில் தீயாய் நின்று,
அன்பே நீ எனை உருக்குகிறாய்..!
அன்பே நீ எனை உருக்குகிறாய்..!
எனக்குள் நிகழும் மாற்றங்க ளெல்லாம்
உனக்குள் நிகழக் கூடுமா..?
இப்படியே நான் ஏங்கி ஏங்கி,
இழைத்தால் மட்டும் போதுமா..? - சொல்
இழைத்தால் மட்டும் போதுமா..?
சருகில் பற்றிய நெருப்பைப் போல
மனதில் பரவி எரிகின்றாய் - நான்
விழிகளை மூடிக் கிடந்தால் கூட
படமாய் நெஞ்சில் விரிகின்றாய்..? - நீ
படமாய் நெஞ்சில் விரிகின்றாய்..?
மெழுகின் தலையில் தீயாய் நின்று
அன்பே நீ எனை உருக்குகிறாய்..!
தென்றலைப் போல மெதுவாய் நுழைந்து
வாலிப வேதனை பெருக்குகிறாய்..! - என்
வாலிப வேதனை பெருக்குகிறாய்..!
அம்மா அழைப்பது கேட்கவில்லை. - என்
அருகிலிருப்பவர் தெரியவில்லை.
உள்ளும் புறமும் நீயிருந்தாய். - என்
உயிரிலும், உணர்விலும் நீயிருந்தாய்.
தரிகெட்டுத் தவிக்குது என்மனசு. - உனை
தழுவிடத் துடிக்குது என்வயசு.
ஒவ்வொரு நொடியும் கரைகிறது. - நீ
இல்லாமல் விழிகள் நிறைகிறது..! - நீ
இல்லாமல் விழிகள் நிறைகிறது..!
மெழுகின் தலையில் தீயாய் நின்று
அன்பே நீ எனை உருக்குகிறாய்..!
தென்றலைப் போல மெதுவாய் நுழைந்து
வாலிப வேதனை பெருக்குகிறாய்..! - என்
வாலிப வேதனை பெருக்குகிறாய்..!