உச்சி வெயில் நிச்சயமா..!

உச்சி வெயில் நிச்சயமா,
கீழிறங்கி மாலைவரும்...
கீழிறங்கிப் போனதெல்லாம்,
கீழ்திசையில் நாளைவரும்...
கீழ்திசையில் நாளைவரும்...

உச்சி வெயில் நிச்சயமா,
கீழிறங்கி மாலைவரும்...
கீழிறங்கி மாலைவரும்...

ஆடாத ஆட்டமெலாம்,
ஆடினவன் போன இடம்,
தேடுனாலும் கெடைக்கலடா..!
தெசவழியோ தெரியலடா..!
அடுத்தவன் வாழ்க்கைய நீ,
பாடமாக எடுத்துக்கோ..!
இல்லையின்னா ஒன்வாழ்க்க,
இருண்டுபோகும் பாத்துக்கோ..! - வாழ்க்க
இருண்டுபோகும் பாத்துக்கோ..!

உச்சி வெயில் நிச்சயமா,
கீழிறங்கி மாலைவரும்...
கீழிறங்கிப் போனதெல்லாம்,
கீழ்திசையில் நாளைவரும்...
கீழ்திசையில் நாளைவரும்...

வீராப்பு பேசினவன்,
வீழ்ந்தகதை உள்ளதடா..!
இப்போதே நீ ஒன்ன,
திருத்திக்கிட்டா நல்லதடா..! - ஒன்ன
திருத்திக்கிட்டா நல்லதடா..!
தப்புமேல தப்பு செஞ்சு,
தறிகெட்டு ஓடாதே..!
கால்தடுக்கி நீவிழுந்தா,
கைகொடுக்க வாராதே..! - ஜனம்
கைகொடுக்க வாராதே..!

உச்சி வெயில் நிச்சயமா,
கீழிறங்கி மாலைவரும்...
கீழிறங்கிப் போனதெல்லாம்,
கீழ்திசையில் நாளைவரும் ...
கீழ்திசையில் நாளைவரும்...

Sumankavi

சாவி தயாரிப்பவன்

Previous Post Next Post

Contact Form