உலகம் மிகமிகப் பெரியது நண்பா..!

உலகம் மிகமிகப் பெரியது நண்பா - இந்த
உலகம் மிகமிகப் பெரியது..!
நாம் காண்பது மட்டுமே உலகமல்ல
நாம் வாழ்வது மட்டுமே வாழ்க்கை அல்ல

உலகம் மிகமிகப் பெரியது நண்பா
- இந்த
உலகம் மிகமிகப் பெரியது..!
(உலகம் மிகமிகப் பெரியது..!)

சைபீரியாவின் பனியில் வாழும்
மனிதன் அறிந்த மழைமான் வளர்ப்பை
சைபர் கணினி படித்தவன் அறியான்.
சைபர் கணினி படித்தவன் அறியான்.
நைஜர் நாட்டுப் பாலை வனத்தில்
ஒட்டக மோட்டும் வித்தை கற்றவன்
வரட்சியில் வாழும் ஆற்றல் பெற்றவன்
வாழ்க்கையை நம்மால் வாழ முடியுமா..?
மணலைக் கட்டி ஆள முடியுமா..!
ஆக்சிஜன் சிலிண்டர் ஏதுமில்லாமல்
ஆழ்கடலுக்குள் மீனைப் பிடிக்கும்
பஜாவ் பழங்குடி வாழ்க்கை தெரியுமா
பட்டம் மட்டுமே வாழ்க்கை யாகுமா..?

உலகம் மிகமிகப் பெரியது நண்பா - இந்த
உலகம் மிகமிகப் பெரியது..!
நாம் காண்பது மட்டுமே உலகமல்ல
நாம் வாழ்வது மட்டுமே வாழ்க்கை அல்ல

பனியை கொண்டே பனிக்குக் கூரை
வேய்ந்து வாழும் எஸ்கிமோவின்
இக்ளூவுக்குள் இருக்க முடியுமா
ஒருமணி நேரம் பொறுக்க முடியுமா..!
புர்கினா பாசோ தங்கச் சுரங்கம்
எத்தனை அடியென இறங்கிய துண்டா..?
இயற்கையை எதிர்த்து முளங்கிய துண்டா..?
எத்தனை விதமாய் வாழ்க்கையடா
எல்லாம் நமக்கு பாடமடா
நான்தான் பெரிய ஞானி என்கிற
ஆணவப் போக்கை அடித்து நொறுக்கு
நானும் இந்த மனிதக் கடலில்
ஒற்றைத் துளியனும் உணர்வைப் பெருக்கு.

உலகம் மிகமிகப் பெரியது நண்பா - இந்த
உலகம் மிகமிகப் பெரியது..!
நாம் காண்பது மட்டுமே உலகமல்ல
நாம் வாழ்வது மட்டுமே வாழ்க்கை அல்ல.


Sumankavi

சாவி தயாரிப்பவன்

Previous Post Next Post

Contact Form