நினைவின் ரகசிய அறையில்...

நினைவின் ரகசிய அறையில்
உனை நான்
மறைத்து வைத்திருப்பேன்..!
யாரும் அறியா நேரம் உன்னுடன்
பேசிக் களித்திருப்பேன்..! - தினமும்
பேசிக் களித்திருப்பேன்..!

நினைவின் ரகசிய அறையில்
உனை நான்
மறைத்து வைத்திருப்பேன்..! - ஆம்
மறைத்து வைத்திருப்பேன்..!

புத்தகத்துக்குள் புதைத்து வைத்த
மயிலிறகைப் போல
எவரும் அறியா வேளையில் உன்னைத்
திறந்து பார்ப்பதுவும்
மீண்டும் உன்னை இருதயத்துக்குள்
மறைத்துக் கொள்ளுவதும்
வெளியில் ஏதும் நடக்காதது போல்
நடித்துக் கொள்ளுவதும்
எத்தனைப் பெரிய கொடுமை என்பது
உனக்குத் தெரியாது
ஏனெனில் எந்தன் ரகசிய காதலைச்
சொன்னது கிடையாது - உன்னிடம்
சொன்னது கிடையாது..!

நினைவின் ரகசிய அறையில்
உனை நான்
மறைத்து வைத்திருப்பேன்.!
யாரும் அறியா நேரம் உன்னுடன்
பேசிக் களித்திருப்பேன் - தினமும்
பேசிக் களித்திருப்பேன்

உன்னைப் பிரிந்து வெகு தூரம் நான்
பயணப்பட்டு விட்டேன்
மீண்டும் இருவரும் காணாத் தொலைவு
விலகி வந்துவிட்டேன்
ஆனாலும் உன் நினைவுகள் எந்தன்
நெஞ்சில் இருக்கிறது - அந்த
நினைவுகள் என்னுள் இருப்பதனால் தான்
உயிரும் இருக்கிறது - உடலில்
உயிரும் இருக்கிறது..!

நினைவின் ரகசிய அறையில்
உனை நான்
மறைத்து வைத்திருப்பேன்
யாரும் அறியா நேரம் உன்னுடன்
பேசிக் களித்திருப்பேன் - தினமும்
பேசிக் களித்திருப்பேன்

வாழ்வில் மீண்டும் ஏதோ ஒரு நாள்
சந்திக்க வாய்ப்பிருந்தால்
நிச்சயம் எனது காதலை உன்னிடம் 
சொல்லி முடித்திடுவேன்
அதுவரை உன்னை நினைத்து நினைத்து
கண்ணீர் வடித்திடுவேன் - எனக்குள்
கண்ணீர் வடித்திடுவேன்..!

Sumankavi

சாவி தயாரிப்பவன்

Previous Post Next Post

Contact Form