சவடால் பேச்சை தவிர உங்களின் சாதனை என்ன..?

சவடால் பேச்சை தவிர உங்களின்
சாதனை என்ன சொல்லுங்க - செய்த
சாதனை என்ன சொல்லுங்க.
எதையும் செய்யத் துப்பில்லன்னா
வாயை மூடிக் கொள்ளுங்க - ஒங்க
வாயை மூடிக் கொள்ளுங்க..!

சவடால் பேச்சை தவிர உங்களின்
சாதனை என்ன சொல்லுங்க - செய்த
சாதனை என்ன சொல்லுங்க.

திரைப்பட வசனம் பேசி மக்களை
திசை திருப்பாமல் சொல்லுங்க
கரூர் சாவுக்குக் காரணம் யாரென
உண்மையை ஒத்துக் கொள்ளுங்க - முதலில்
உண்மையை ஒத்துக் கொள்ளுங்க..!
தாமதமாக வந்தது உங்கள் தவறில்லையா..!
உங்கள் தவறில்லையா..!
போலீஸ் தடுத்தும் கேளாமல் வண்டியை
புகுத்திய துங்கள் தவறில்லையா..!
மக்கள் செத்து மடிகிற வேளையில்
பாட்டு போட்டது யாரைய்யா..! - அங்கே
ஆட்டம் போட்டது யாரைய்யா..!
துளியும் கூட வெட்கமில்லாமல்
பழைய பொய்யை சொல்லுகிறாய்..!
செத்துப் போனவன் உயிரை மீண்டும்
தூக்கில் போட்டுக் கொல்லுகிறாய்..! - உயிரை
தூக்கில் போட்டுக் கொல்லுகிறாய்..!

சவடால் பேச்சை தவிர உங்களின்
சாதனை என்ன சொல்லுங்க - செய்த
சாதனை என்ன சொல்லுங்க.
எதையும் செய்யத் துப்பில்லன்னா
வாயை மூடிக் கொள்ளுங்க - ஒங்க
வாயை மூடிக் கொள்ளுங்க..!

மரண ஓலம் விண்ணைக் கிழிக்க
மக்கள் வெள்ளம் கண்ணீர் வடிக்க
ஓட்டம் பிடித்தது யாரைய்யா..? - விட்டு
ஓட்டம் பிடித்தது யாரைய்யா..?
நீங்களும் உங்கள் கட்சிக்காரனும்
தலைமறை வானது ஏனைய்யா - பலநாள்
தலைமறை வானது ஏனைய்யா..!
எதையும் நாங்கள் மறந்தா போனோம்
இனிமேல் ஸ்க்ரிப்ட்டை மாற்றுங்க
பொய்களைப் பார்த்து புளித்துப் போனது
உண்மையை மேடையில் ஏற்றுங்க - இனிமேல்
உண்மையை மேடையில் ஏற்றுங்க..!

சவடால் பேச்சை தவிர உங்களின்
சாதனை என்ன சொல்லுங்க - செய்த
சாதனை என்ன சொல்லுங்க.
எதையும் செய்யத் துப்பில்லன்னா
வாயை மூடிக் கொள்ளுங்க - ஒங்க
வாயை மூடிக் கொள்ளுங்க..!

Sumankavi

சாவி தயாரிப்பவன்

Previous Post Next Post

Contact Form