காற்றில் அசையும் கூந்தல் எனது
முகத்தில் படுகிறது - எனது
முகத்தில் படுகிறது
அதன்
வாசம் எனக்குள் ஏதோ ஒரு வகை
சிலிர்ப்பை தருகிறது - ஆம்
சிலிர்ப்பை தருகிறது
காற்றில் அசையும் கூந்தல் எனது
முகத்தில் படுகிறது - லேசாய்
முகத்தில் படுகிறது...
ஜன்னல் ஓரப் பயணம் எனக்குள்
கவிதைகள் தருகிறது - பல
கவிதைகள் தருகிறது
அதை எழுதி முடிக்கக் காகித மில்லை
கன்னம் தெரிகிறது - உனது
கன்னம் தெரிகிறது..!
முத்த கவிதைகள் எழுத அந்த
காகிதம் உதவாது - வெற்றுக்
காகிதம் உதவாது..!
நினைத்ததை எல்லாம் எழுதி முடிக்க
நேரம் கிடையாது - இது
நேரம் கிடையாது..!
காற்றில் அசையும் கூந்தல் எனது
முகத்தில் படுகிறது - எனது
முகத்தில் படுகிறது
அதன்
வாசம் எனக்குள் ஏதோ ஒரு வகை
சிலிர்ப்பை தருகிறது - அன்பே
சிலிர்ப்பை தருகிறது
காற்று செய்கிற செய்கையை என்னால்
பொறுக்க முடியவில்லை - கண்ணே
பொறுக்க முடியவில்லை..! - அது
கண்ட இடத்தில் தொடுவதை என்னால்
சகிக்க முடியவில்லை - என்னால்
சகிக்க முடியவில்லை
காற்றாய் இருந்தால் கூட உனைநான்
கட்டி அணைத்திருப்பேன் - அமுதே
கட்டி அணைத்திருப்பேன்..! - அந்த
பாக்கியம் மற்றுப் போனதை எண்ணி
பொறாமைப் பட்டிருந்தேன் - காற்றிடம்
பொறாமைப் பட்டிருந்தேன்...
காற்றில் அசையும் கூந்தல் எனது முகத்தில் படுகிறது - எனது
முகத்தில் படுகிறது
அதன்
வாசம் எனக்குள் ஏதோ ஒரு வகை
சிலிர்ப்பை தருகிறது - அன்பே
சிலிர்ப்பை தருகிறது.
முகத்தில் படுகிறது - எனது
முகத்தில் படுகிறது
அதன்
வாசம் எனக்குள் ஏதோ ஒரு வகை
சிலிர்ப்பை தருகிறது - ஆம்
சிலிர்ப்பை தருகிறது
காற்றில் அசையும் கூந்தல் எனது
முகத்தில் படுகிறது - லேசாய்
முகத்தில் படுகிறது...
ஜன்னல் ஓரப் பயணம் எனக்குள்
கவிதைகள் தருகிறது - பல
கவிதைகள் தருகிறது
அதை எழுதி முடிக்கக் காகித மில்லை
கன்னம் தெரிகிறது - உனது
கன்னம் தெரிகிறது..!
முத்த கவிதைகள் எழுத அந்த
காகிதம் உதவாது - வெற்றுக்
காகிதம் உதவாது..!
நினைத்ததை எல்லாம் எழுதி முடிக்க
நேரம் கிடையாது - இது
நேரம் கிடையாது..!
காற்றில் அசையும் கூந்தல் எனது
முகத்தில் படுகிறது - எனது
முகத்தில் படுகிறது
அதன்
வாசம் எனக்குள் ஏதோ ஒரு வகை
சிலிர்ப்பை தருகிறது - அன்பே
சிலிர்ப்பை தருகிறது
காற்று செய்கிற செய்கையை என்னால்
பொறுக்க முடியவில்லை - கண்ணே
பொறுக்க முடியவில்லை..! - அது
கண்ட இடத்தில் தொடுவதை என்னால்
சகிக்க முடியவில்லை - என்னால்
சகிக்க முடியவில்லை
காற்றாய் இருந்தால் கூட உனைநான்
கட்டி அணைத்திருப்பேன் - அமுதே
கட்டி அணைத்திருப்பேன்..! - அந்த
பாக்கியம் மற்றுப் போனதை எண்ணி
பொறாமைப் பட்டிருந்தேன் - காற்றிடம்
பொறாமைப் பட்டிருந்தேன்...
காற்றில் அசையும் கூந்தல் எனது முகத்தில் படுகிறது - எனது
முகத்தில் படுகிறது
அதன்
வாசம் எனக்குள் ஏதோ ஒரு வகை
சிலிர்ப்பை தருகிறது - அன்பே
சிலிர்ப்பை தருகிறது.