நீ பொட்டு மாமாவா..?

நீ பொட்டு மாமாவா..? - இல்ல
ஸ்க்ரிப்டு மாமாவா..?
(நீ பொட்டு மாமாவா..? - இல்ல
ஸ்க்ரிப்டு மாமாவா..?)
ஸ்க்ரிப்டு இல்லன்னா..!
நீ வெத்து மாமாவா..?

நீ பொட்டு மாமாவா..? - இல்ல
ஸ்க்ரிப்டு மாமாவா..?

நேத்து கேட்ட கேள்விக்கு
இப்ப வந்து உளறுற
நாலு வார்த்த பேசவே
நாக்கு புரண்டு குளறுர
ஸ்க்ரிப்டில்லா நேரத்தில்
பெணத்தப் போல இருக்கிற
அடுத்த நாளு ஸ்க்ரிப்டுல
ஆக்ஷன் படம் காட்டுற

நீ பொட்டு மாமாவா..? - இல்ல
ஸ்க்ரிப்டு மாமாவா..?
ஸ்க்ரிப்டு இல்லன்னா..!
நீ வெத்து மாமாவா..?

சட்ட மன்ற கூட்டமே
ஷுட்டிங் ஸ்பாட் ஆனது
விசிலடிச்சான் குஞ்சிக்கு
வெட்கம் விட்டுப் போனது
விவசாயி கொதிக்கிறான்
பொதுமக்கள் துடிக்கிறான்
கூத்தாடி நடிகனோ
கும்மாளம் அடிக்கிறான்..!

நீ பொட்டு மாமாவா..? - இல்ல
ஸ்க்ரிப்டு மாமாவா..?
ஸ்க்ரிப்டு இல்லன்னா..!
நீ வெத்து மாமாவா..?

Sumankavi

சாவி தயாரிப்பவன்

Previous Post Next Post

Contact Form