பிரிவே உறவை வளர்க்கிறது...

பிரிவே உறவை வளர்க்கிறது.
இடைவெளி நம்மை இணைக்கிறது.
உடல்கள் தூரமாய் இருந்தாலும்,
உணர்வுகளுக்குள் தூரமில்லை - நம்
உணர்வுகளுக்குள் தூரமில்லை.
ஒவ்வொரு கணமும் நினைக்கின்றேன் - என்
உயிரால் உன்னை அணைக்கின்றேன்

பிரிவே உறவை வளர்க்கிறது.
இடைவெளி நம்மை இணைக்கிறது.

அருகில் இருக்கும் அத்தனை பேரும்,
நெருக்கமான நபரில்லை. - எனக்கு
நெருக்கமான நபரில்லை…!
தொலைவில் இருக்கும் காரணத்தாலே,
தொலைந்து நீயும் விடவில்லை … - ஆம்
தொலைந்து நீயும் விடவில்லை…
இதயம் என்பது இருக்கிற வரையில், 
எண்ண அலைகள் அடிக்கிற வரையில்,
நினைவின் கடலில் நீந்துவேன். - உன்
ஒருத்தியை மட்டும் ஏந்துவேன்..!

பிரிவே உறவை வளர்க்கிறது.
இடைவெளி நம்மை இணைக்கிறது.
உடல்கள் தூரமாய் இருந்தாலும்,
உணர்வுகளுக்குள் தூரமில்லை. - நம்
உணர்வுகளுக்குள் தூரமில்லை.

எங்கோ இருந்துநீ ஸ்வாசித்த காற்று,
எந்தன் மூச்சில் கலக்கிறது.
என்றோ வீசிய மல்லிகை வாசம்,
இப்பொழுதும் தான் மணக்கிறது..!
உந்தன் ஜன்னலில் தெரிகிற நிலவு, 
எங்கள் வீட்டிலும் தெரிகிறது.
உனக்கு மேலே இருக்கும் வானம்,
எனக்கு மேலும் விரிகிறது.
கண்கள் திறந்தால் காட்சிகள் தெரியும்; 
.கண்ணை மூடியும் தெரிகின்றாய், - நீ
கண்ணை மூடியும் தெரிகின்றாய்..!
ஆழ்ந்த உறங்கும் வேளையில் கூட,
கனவாய் வந்து விடுகின்றாய். - நீ
கனவாய் வந்து விடுகின்றாய்.

பிரிவே உறவை வளர்க்கிறது.
இடைவெளி நம்மை இணைக்கிறது.
உடல்கள் தூரமாய் இருந்தாலும்,
உணர்வுகளுக்குள் தூரமில்லை. - நம்
உணர்வுகளுக்குள் தூரமில்லை.


Sumankavi

சாவி தயாரிப்பவன்

Previous Post Next Post

Contact Form