ஆறு மணிக்கு மேல ஆட்டோ ஓடாது தம்பி..!

ஆறு மணிக்கு மேல இந்த
ஆட்டோ ஓடாது தம்பி…
எப்படிடா ஓட்டு போட்ட
இவனயும் நீ நம்பி..!

ஃபாரின் சரக்கு அடிக்கிற
பரம ஏழை இவரு
பாட்டாளி குடிக்கிற
டாஸ்மார்க்கு தவறு

ஆறு மணிக்கு மேல இந்த
ஆட்டோ ஓடாது தம்பி…
எப்படிடா ஓட்டு போட்ட
இவனயும் நீ நம்பி..!


நீதி நெறி நேர்மை எல்லாம் ஊருக்குத்தான் ராசா
காசு இருந்தா வச்சுக்கலாம்
கூட ஒரு ரோசா
பாக்க வந்து செத்துப்புட்டா
தலதெறிக்க ஓடு
பழிய தூக்கி அடுத்தவங்க
தலமேல போடு.

ஆறு மணிக்கு மேல இந்த
ஆட்டோ ஓடாது தம்பி…
எப்படிடா ஓட்டு போட்ட
இவனயும் நீ நம்பி..!

அலிபாபா திருடர்களும்
போல ஒரு கூட்டம்..!
ஆடுதுபார் சபையினிலே
கோமாளி ஆட்டம்…!
கேன்சருக்கு பரிகாரம்
ஜோசியத்தில் இருக்கு
சொன்னவள தேர்ந்தெடுத்த
அத்தன பேரும் கிறுக்கு..!

ஆறு மணிக்கு மேல இந்த
ஆட்டோ ஓடாது தம்பி…
எப்படிடா ஓட்டு போட்ட
இவனயும் நீ நம்பி..!



Sumankavi

சாவி தயாரிப்பவன்

Previous Post Next Post

Contact Form