இது மாற்றமில்ல…
உனக்கு தடுமாற்றம்.
மக்களுக்கு ஏமாற்றம்…
மொத்தத்தில் துர்நாற்றம்.
இது மாற்றமில்ல…
உனக்கு தடுமாற்றம்.
மக்களுக்கு ஏமாற்றம்…
மொத்தத்தில் துர்நாற்றம்.
பெண்கள் பாதுகாப்பு பேச்சில தான் இருக்குது.
நேற்றப் போல கற்பழிப்பு இன்னைக்கும் தான் நடக்குது.
கஞ்சா வளக்குறது உன்னோட ஆளு தான்.
போக்சோ வழக்கிலயும் தற்குறிகள் பேருதான்.
பாட்டிலுக்கு பத்துருபாய் வாங்குறது நிக்கல.
பொதுமக்கள் புலம்புறது உன் காதில் கேட்கல…!
இது மாற்றமில்ல…
உனக்கு தடுமாற்றம்.
மக்களுக்கு ஏமாற்றம்…
மொத்தத்தில் துர்நாற்றம்.
அறிவில்லா தற்குறிகள் அமைச்சர்களா மாறிட்டான்.
அதிகார போதையிலே அரியணையில் ஏறிட்டான்.
அனுபவமே இல்லாம பேஸ்மன்ட்டு ஆடுது…
பில்டிங் ஸ்டாங்குன்னு ரீல்ஸு மட்டும் ஓடுது…
ஏதேதோ நடக்குமுன்னு கதகட்டி விட்டது
எதுவும் நகராம அப்படியே நிக்குது..!
இது மாற்றமில்ல…
உனக்கு தடுமாற்றம்.
மக்களுக்கு ஏமாற்றம்…
மொத்தத்தில் துர்நாற்றம்.
Tags:
Politics