ஆர்எஸ்எஸின் கள்ள பிள்ளையை அணைத்து கொஞ்சுதல் தகுமா…!

ஆர்எஸ்எஸின் கள்ள பிள்ளையை
அணைத்து கொஞ்சுதல் தகுமா…!
திருமா
அணைத்து கொஞ்சுதல் தகுமா..!

சமூக நீதி கிடைப்பது இந்த
சனாதனத்தின் கடையிலா..?
சனாதனத்தின் கடையிலா..?
போராளி இன்று சேவகம் புரிவது
காவிகள் நடத்தும் படையிலா..?
காவிகள் நடத்தும் படையிலா..?

ஆர்எஸ்எஸின் கள்ள பிள்ளையை
அணைத்து கொஞ்சுதல் தகுமா…!
திருமா
அணைத்து கொஞ்சுதல் தகுமா..!

சிறுத்தைகள் இன்று உணர்வை இழந்து
சர்க்கஸ் விலங்காய் ஆனது..! - வெறும்
சர்க்கஸ் விலங்காய் ஆனது..!
அதன் விடுதலை உணர்வும் வேகமும் இன்று
எங்கே தொலைந்து போனது..!
எங்கே தொலைந்து போனது..!
பாபா சாகேப் அம்பேத்கரை நாம்
லாட்டரி சீட்டில் தேடுவதா? - திருட்டு
லாட்டரி சீட்டில் தேடுவதா?
பேசிய கொள்கை கோட்பா டெல்லாம்
காற்றில் பறக்க ஓடுவதா… - விட்டு
காற்றில் பறக்க ஓடுவதா…

ஆர்எஸ்எஸின் கள்ள பிள்ளையை
அணைத்துக் கொஞ்சுதல் தகுமா…!
திருமா
அணைத்து கொஞ்சுதல் தகுமா..!

அதிகார மென்ற வடையை தந்தால்
பொறியில் நாமும் வீழுவதா..! - காவி
பொறியில் நாமும் வீழுவதா..!

சதிகா ரர்கள் சூழ்ச்சியில் சிக்கி
சதிக்கு உடந்தை ஆகுவதா - நாம்
சதிக்கு உடந்தை ஆகுவதா..!

ஆர்எஸ்எஸின் கள்ள பிள்ளையை
அணைத்து கொஞ்சுதல் தகுமா…!
திருமா
அணைத்து கொஞ்சுதல் தகுமா..!




Sumankavi

சாவி தயாரிப்பவன்

Previous Post Next Post

Contact Form