லாட்டரி கும்பலின் கைகளில் நாட்ட கொடுத்துட்டு நிக்கிறோம்..!

லாட்டரி கும்பலின் கைகளில்
நாட்ட கொடுத்துட்டு நிக்கிறோம்..! - நம்ம
நாட்ட கொடுத்துட்டு நிக்கிறோம்..!
நாடே இன்று சூதாட்டக் களமாய்
மாறிப்போனத பாக்குறோம் - இன்று
மாறிப்போனத பாக்குறோம்.

லாட்டரி கும்பலின் கைகளில்
நாட்ட கொடுத்துட்டு நிக்கிறோம்..! நம்ம
நாட்ட கொடுத்துட்டு நிக்கிறோம்..!

குதிரை வேகத்தில் குதிரை பேரத்த
நடத்துற அந்த கொடுமைய பாரு
அடுத்தவன் கட்சிய ஆட்டைய போட்டு
அடிக்கிற அந்தர் பல்ட்டிய பாரு…
கீழே விலகல் மேலே இணைவு
புதிய பண்பாட்டுப் புரட்சியப் பாரு
மக்கள் அளித்த தீர்ப்பை அவர்கள்
மசுரா கூட மதிக்கல பாரு..

லாட்டரி கும்பலின் கைகளில்
நாட்ட கொடுத்துட்டு நிக்கிறோம்..! - நம்ம
நாட்ட கொடுத்துட்டு நிக்கிறோம்..!
நாடே இன்று சூதாட்டக் களமாய்
மாறிப்போனத பாக்குறோம் - இன்று
மாறிப்போனத பாக்குறோம்.

சோபா அனுப்பி ஆளைக் கடத்தும்
புஷ்பா மாடல் ஆட்சியப் பாரு…
மைனா ரிட்டி நிலையில் இருந்தும்
ஆடுற அவர்கள் ஆட்டத்த பாரு…
மாற்றம் மாற்றம் என்று நீங்கள்
கேட்டது இந்த கேவலம் தானா..!
நடிகனை நம்பி வீணாய்ப் போன
தற் குறி இதற்கு பதில்சொல் வானா..?

லாட்டரி கும்பலின் கைகளில்
நாட்ட கொடுத்துட்டு நிக்கிறோம்..! - நம்ம
நாட்ட கொடுத்துட்டு நிக்கிறோம்..!
நாடே இன்று சூதாட்டக் களமாய்
மாறிப்போனத பாக்குறோம் - இன்று
மாறிப்போனத பாக்குறோம்.



Sumankavi

சாவி தயாரிப்பவன்

Previous Post Next Post

Contact Form