பயணம் தொடர்கிறது - நமது
பயணம் தொடர்கிறது
ஒருவர் கரத்தை ஒருவர் பற்றி
ஒருவர் விழுந்தால் ஒருவர் தூக்கி
இருவரும் விழுந்தால் இணைந்தே எழுந்து
பயணம் தொடர்கிறது - நமது
பயணம் தொடர்கிறது…
காடு மலைகளை கடந்து விட்டோம்…
கடும் குளிர், கோடைகள் கடந்து வந்தோம்…
மகிழ்வில் இருவரும் நனைந்திருந்தோம்
துயரில் இருவரும் துணை இருந்தோம்
உனது கண்ணீர் எனது விரலில்
எனது சுமைகள் உனது தோளில்
ஒருவரை ஒருவர் மாற்றி சுமந்து
உயிர் பிழைத் திருப்பது சுகம் அல்லவா…
உன்னோடு வாழ்வது வரமல்லவா…
பயணம் தொடர்கிறது - நமது
பயணம் தொடர்கிறது
ஒருவர் கரத்தை ஒருவர் பற்றி
ஒருவர் விழுந்தால் ஒருவர் தூக்கி
இருவரும் விழுந்தால் இணைந்தே எழுந்து
பயணம் தொடர்கிறது - நமது
பயணம் தொடர்கிறது…
வாழ்க்கை நம்மை வருத்தும் போதும்
வறுமை நம்மை துரத்தும் போதும்
இணைந்த கைகள் பிரியவில்லை
இயற்கையால் கூட முடியவில்லை
நெருப்பும் கூட தோற்றது - கொட்டும்
மழையும் கூட தோற்றது - இங்கே
பாலை வனங்கள் பூத்தது - வரண்ட
பாலை வனங்கள் பூத்தது… - என்றும்
பயணம் தொடர்கிறது - நமது
பயணம் தொடர்கிறது
ஒருவர் கரத்தை ஒருவர் பற்றி
ஒருவர் விழுந்தால் ஒருவர் தூக்கி
இருவரும் விழுந்தால் இணைந்தே எழுந்து
பயணம் தொடர்கிறது - நமது
பயணம் தொடர்கிறது…