என்ன நடக்கிறது..!

என்ன நடக்கிறது - நமக்குள்
என்ன நடக்கிறது
உனது லிப்ஸ்டிக் எனது உதட்டில்
எனது ஸ்வாசம் உனது முகத்தில்
ஒன்றைக் கொடுத்து ஒன்றை வாங்கி
வாங்கிய வற்றை மீண்டும் வழங்கி

என்ன நடக்கிறது - நமக்குள்
என்ன நடக்கிறது

எரிமலை ஒன்று நெஞ்சுக் குள்ளே
வெடித்துச் சிதறும் நேரம்
பனிமலை ஒன்று உருகி எந்தன்
மடியில் ஆனந்த ஈரம்…
மெல்லிய வளைவில்
விரல்கள் சறுக்கி
மேட்டை நோக்கி ஏறும்
சமவெளி குன்று நீர்வீழ்ச்சி என்று
உடலே பூமியாய் மாறும் - உன்
உடலே பூமியாய் மாறும்…

என்ன நடக்கிறது - நமக்குள்
என்ன நடக்கிறது
உனது லிப்ஸ்டிக் எனது உதட்டில்
எனது ஸ்வாசம் உனது முகத்தில்
ஒன்றைக் கொடுத்து ஒன்றை வாங்கி
வாங்கியவற்றை மீண்டும் வழங்கி

என்ன நடக்கிறது - நமக்குள்
என்ன நடக்கிறது

சுமைகள் இங்கே சுகமாய் மாற
சுகமோ நெஞ்சில் சுமையாய் ஏற
குதிரை வேகத்தில் ஓடுது ரத்தம்
கதவை உடைக்கும் ஆனந்தச் சத்தம்
நிலைமை தலைகீ ழானது இங்கே
வெட்கம் விட்டுப் போனது எங்கே - உந்தன்
வெட்கம் விட்டுப் போனது எங்கே..?

என்ன நடக்கிறது - நமக்குள்
என்ன நடக்கிறது
உனது லிப்ஸ்டிக் எனது உதட்டில்
எனது ஸ்வாசம் உனது முகத்தில்
ஒன்றைக் கொடுத்து ஒன்றை வாங்கி
வாங்கியவற்றை மீண்டும் வழங்கி

என்ன நடக்கிறது - நமக்குள்
என்ன நடக்கிறது

Sumankavi

சாவி தயாரிப்பவன்

Previous Post Next Post

Contact Form