பாஜாகா இறங்கி நிற்கிறது…

பாஜக இறங்கி நிற்கிறது… - அங்கே
பாஜக இறங்கி நிற்கிறது…

எங்கே நிம்மதி தொலைந்ததுவோ…!
எங்கே பதற்றம் தொடர்கிறதோ…!
எங்கே நியாயம் தோற்கிறதோ..!
எங்கே அழுகுரல் கேட்கிறதோ..!

பாஜக இறங்கி நிற்கிறது… - அங்கே
பாஜக இறங்கி நிற்கிறது…

வாழ்ந்த தலைமை மரணத்தில்
ஆழ்ந்த மர்மம் தெரிகிறதா
ஆண்ட கட்சிகள் கண்முன்னே
அழியும் நிலை தான் வருகிறதா
வீரியமான தலைவர்கள்
வீட்டுக் கனுப்பப் பட்டாலோ
வெற்று நடிகன் விளையாட்டாய்
ஆட்சியைப் பிடித்து விட்டாலோ
தானாய் எதுவும் நடக்கவில்லை
நெருப்பில்லாமல் புகையவில்லை

பாஜக இறங்கி நிற்கிறது… - அங்கே
பாஜக இறங்கி நிற்கிறது…

அரசியல் சூழல் தடுமாற்றம்
ஆண்டுகள் பலவாய் தொடர்கிறதா
கட்சித்தாவல் கண் முன்னே
கேவலமாக நடக்கிறதா
ஆளுநர் போடும் ஆட்டங்கள்
அத்து மீறிப் போகிறதா..!
சனாதனத்தின் சட்டங்கள்
சத்தமில் லாமல் நுழைகிறதா..?
இயல்பாய் எதுவும் நடக்கவில்லை
டம்மிகள் தானே பிறப்பதில்லை

பாஜக இறங்கி நிற்கிறது… - அங்கே
பாஜக இறங்கி நிற்கிறது…

எங்கே நிம்மதி தொலைந்ததுவோ…!
எங்கே பதற்றம் தொடர்கிறதோ…!
எங்கே நியாயம் தோற்கிறதோ..!
எங்கே அழுகுரல் கேட்கிறதோ..!

பாஜக இறங்கி நிற்கிறது… - அங்கே
பாஜக இறங்கி நிற்கிறது…



Sumankavi

சாவி தயாரிப்பவன்

Previous Post Next Post

Contact Form