அடையாளத் திருடன் ஒருத்தன் இருக்கிறான் - அவன்
அடுத்தவங்க அடையாளத்த பறிக்கிறான்
முற்போக்கு வாதிபோல நடிக்கிறான் - அவன்
ஆரெஸ்செஸ் அஜெண்டாவ வெதைக்கிறான்…
பெரியாரின் சிலைக்கு போயி
மால யதான் போடு
பெரியாரின் கொள்கைகளை
குழியில் போட்டு மூடு
அண்ணா என் தலைவர் என்று
பின்னால சேரு
மாநிலத்தின் உரிமைகள
மண்ண போட்டு மூடு
எம்ஜிஆரின் தம்பியென மேடையிலே கூறு
எம்ஜியாரின் கட்சியவே வெட்டி கூறுபோடு…!
அடையாளத் திருடன் ஒருத்தன் இருக்கிறான் - அவன்
அடுத்தவங்க அடையாளத்த பறிக்கிறான்
முற்போக்கு வாதிபோல நடிக்கிறான் - அவன்
ஆரெஸ்செஸ் அஜெண்டாவ வெதைக்கிறான்…
சமூக நீதியின்னு வாய்கிழியப் பேசு
அவ்வாள அறநிலைய அமைச்சராக மாத்து
சாதிபாத்து தலைவர்களை அடையாளப் படுத்து
சாதியவே ஒழிச்சவன்னு உன்னைமுன் நிறுத்து
அண்ணாமல தம்பியின்னு ஆடுனியே அன்று
எம்ஜியாரின் தம்பியின்னு பாடுறியே இன்று
அடையாளத் திருடன் ஒருத்தன் இருக்கிறான் - அவன்
அடுத்தவங்க அடையாளத்த பறிக்கிறான்
முற்போக்கு வாதிபோல நடிக்கிறான் - அவன்
ஆரெஸ்செஸ் அஜெண்டாவ வெதைக்கிறான்…
Tags:
Politics