ஒரு நாளில் கோட்டை கட்ட முடியாது

ஒரு நாளில் கோட்டை கட்ட முடியாது...
பெருவெள்ளம் சட்டென்று வடியாது...
இலக்குகளைக் குறிவைத்து பயணிப்போம்..!
இடைவிடாமல் இறுதிவரை பயணிப்போம்..!

ஒரு நாளில் கோட்டை கட்ட முடியாது...
பெருவெள்ளம் சட்டென்று வடியாது...
பெருவெள்ளம் சட்டென்று வடியாது...

விதைத்து விட்டு தூங்கிவிட்டால் போதுமா..?
விளைச்சல் என்ன வீடு வந்து சேருமா..?
தினந்தோறும் நீர் வார்த்து,
பொழுதெல்லாம் பாதுகாத்து,
கதி ரறுத்து போரடித்து,
கட்டி வந்தால் மட்டுமன்றி,
வெள்ளாமை இல்லையடா... - உனக்கு
வெள்ளாமை இல்லையடா... - இது
அத்தனைக்கும் பொருந்துமடா..! - வாழ்வில்
அத்தனைக்கும் பொருந்துமடா..!

ஒரு நாளில் கோட்டை கட்ட முடியாது.
பெருவெள்ளம் சட்டென்று வடியாது...
இலக்குகளைக் குறிவைத்து பயணிப்போம்..!
இடைவிடாமல் இறுதிவரை பயணிப்போம்..!

தானே எதுவும் நிகழ்ந்துவிடாது - நீ
தள்ளாமல் ஏதும் நகர்ந்துவிடாது...
தள்ளாமல் ஏதும் நகர்ந்துவிடாது...
நாளை பார்த்துக் கொள்ளலாம் - என
கடத்தி கொண்டே செல்வதால்,
நாளும் பொழுதும் வீணடா..! - நீ
தயங்கி நிற்பது ஏனடா..! - நீ
தயங்கி நிற்பது ஏனடா..!

ஒரு நாளில் கோட்டை கட்ட முடியாது...
பெருவெள்ளம் சட்டென்று வடியாது...
இலக்குகளைக் குறிவைத்து பயணிப்போம்..!
இடைவிடாமல் இறுதிவரை பயணிப்போம்..!

Sumankavi

சாவி தயாரிப்பவன்

Previous Post Next Post

Contact Form