சங்கிகளே பாராட்டும் ஆட்சி..!

சங்கிகளே பாராட்டும் ஆட்சி..! - இது
சங்கிகளே பாராட்டும் ஆட்சி..!
பெரியாரின் கொள்கை என்ன ஆச்சு..? - அத
தேர்தலோட பாடகட்டி யாச்சு...
அதனால்,

சங்கிகளே பாராட்டும் ஆட்சி..! - இது
சங்கிகளே பாராட்டும் ஆட்சி..!

மசூதியில் புகுந்து ஒருத்தன் அடிக்கிறான். - அவன்
மனம் பிரண்ட ஆள் போல நடிக்கிறான்...
ஜோசப்பு மேலிருந்து ரசிக்கிறான். - இத
ஜோசப்பு மேலிருந்து ரசிக்கிறான்...
வள்ளுவரை காவி சாயம் பூசுறான்... - இவன்
பிறப்பொக்கும் உயிர்களென்று பேசுறான்... - இவன்
பிறப்பொக்கும் உயிர்களென்று பேசுறான்..!
சிறுபான்மை தானென்று கூறுறான், - ஆனா
அதிகார வெறிபிடிச்சு ஆடுறான்..! - இவன்
அதிகார வெறிபிடிச்சு ஆடுறான்..!

சங்கிகளே பாராட்டும் ஆட்சி..! - இது
சங்கிகளே பாராட்டும் ஆட்சி..!
பெரியாரின் கொள்கை என்ன ஆச்சு..? - அத
தேர்தலோட பாடகட்டி யாச்சு... - (ஆமா
தேர்தலோட பாடகட்டி யாச்சு...)

மாட்டுக்கறி தின்னா அது குத்தமா..! - சிலர்
மனுசக்கறி திங்கிறானே ஞாயமா..? - சிலர்
மனுசக்கறி திங்கிறானே ஞாயமா..?
குற்றவாளி சொகுசாக வாழுறான்..! - பாவம்
மாணவனோ தூக்குப்போட்டு சாகுறான்..!
வடநாட்ட போலமாறி போச்சிடா - சமூக
நீதிசெத்து நாலுமாசம் ஆச்சுடா..! - சமூக
நீதிசெத்து நாலுமாசம் ஆச்சுடா..!

சங்கிகளே பாராட்டும் ஆட்சி..! - இது
சங்கிகளே பாராட்டும் ஆட்சி..!
பெரியாரின் கொள்கை என்ன ஆச்சு..? - அத
தேர்தலோட பாடகட்டி யாச்சு... - (ஆமா
தேர்தலோட பாடகட்டி யாச்சு...)

Sumankavi

சாவி தயாரிப்பவன்

Previous Post Next Post

Contact Form