என்னவோ... இது என்னவோ...

என்னவோ... இது என்னவோ...
எனக்குள் நடக்கிறதே..!
புதிதாய் இன்று புதிதாய்....
ஒரு தென்றல் நுழைகிறதே..!

ஹோ... ஹோஓ...
என்னவோ... இது என்னவோ...
எனக்குள் நடக்கிறதே..! - இன்று
எனக்குள் நடக்கிறதே..!

வானில் இதுவரை தோன்றாத,
புதிய வானவில் பார்க்கின்றேன்..!
நேற்று வரையில் கேளாத,
புதிய மெல்லிசை கேட்கின்றேன்..!
ஆய்வுக் கூடம் காணாத,
வினைகள் எனக்குள் நடக்கிறது...
காற்றில் அசையும் இறகைப் போல்,
அன்பே உன் நினைவுகள் மிதக்கிறது..! - என்
அன்பே உன் நினைவுகள் மிதக்கிறது..!

என்னவோ... இது என்னவோ...
எனக்குள் நடக்கிறதே..!
புதிதாய் இன்று புதிதாய்....
ஒரு தென்றல் நுழைகிறதே..!
ஒரு தென்றல் நுழைகிறதே..!

ஒற்றைப் பார்வை போதுமடா...
ஓரிரு வார்த்தைகள் போதுமடா...
மெல்லிய புன்னகை போதுமடா...
மேனி சிலிர்க்கக் கூடுமடா..! - என்
மேனி சிலிர்க்கக் கூடுமடா..!
எல்லாம் உனக்கென அர்ப்பணிப்பேன் - என்
ஆயுளை உன்னிடம் ஒப்படைப்பேன்..!
மொத்தமும் எடுத்துக்கொள்... - உன்
விரதத்தை முடித்துக் கொள்...
ஹோ...! அன்பே..! என் அன்பே..!

என்னவோ... இது என்னவோ...
எனக்குள் நடக்கிறதே..!
புதிதாய் இன்று புதிதாய்....
ஒரு தென்றல் நுழைகிறதே..!
ஒரு தென்றல் நுழைகிறதே..!

Sumankavi

சாவி தயாரிப்பவன்

Previous Post Next Post

Contact Form