போர்கள் நடப்பதும் தெரியாது...

போர்கள் நடப்பதும் தெரியாது...
புயல்கள் வருவதும் தெரியாது...
நீயே கதியென கிடக்கின்றேன்..! - இந்த
உலக நிகழ்வுகளை மறக்கின்றேன்..! - நான்
உலக நிகழ்வுகளை மறக்கின்றேன்..!

அன்பே..! என் அன்பே..!
போர்கள் நடப்பதும் தெரியாது...
புயல்கள் வருவதும் தெரியாது... - இங்கு
புயல்கள் வருவதும் தெரியாது...

முப்பொழுதும் உன் சிந்தனையில்,
மூழ்கிக் கிடக்கும் என்நினைவு...
பெருமூச்சில் எழும் வெப்பத்தால்,
பற்றி எரியுது என்நிலவு... - தினம்
பற்றி எரியுது என்நிலவு...
கரையுடைந் தோடும் வெள்ளம்போல்,
கற்பனைச் சிறகு நீள்கிறது.
கரம்பிடிப்போம் எனும் உணர்வில்தான்,
அன்பே என்னுயிர் வாழ்கிறது..!
அன்பே என்னுயிர் வாழ்கிறது..!

போர்கள் நடப்பதும் தெரியாது...
புயல்கள் வருவதும் தெரியாது...
நீயே கதியென கிடக்கின்றேன்..! - இந்த
உலக நிகழ்வுகளை மறக்கின்றேன்..! - நான்
உலக நிகழ்வுகளை மறக்கின்றேன்..!

மனதின் அறைகள் முழுவதிலும்,
அன்பே உன்னை சேமித்தேன்...
அருகில் நீவரும் வேளையிலே,
உணர்வைத் தொட்டு சோதித்தேன்... - என்
உணர்வைத் தொட்டு சோதித்தேன்...
கொல்லைப் புறத்து தோட்டத்தில்,
பூக்களில் நீயும் விரிகின்றாய்..!
எல்லையிலாத கவிதைகளை,
எனக்குள் அள்ளித் தருகின்றாய்..! - நீ
எனக்குள் அள்ளித் தருகின்றாய்..!

போர்கள் நடப்பதும் தெரியாது...
புயல்கள் வருவதும் தெரியாது...
நீயே கதியென கிடக்கின்றேன்..! - இந்த
உலக நிகழ்வுகளை மறக்கின்றேன்..! - நான்
உலக நிகழ்வுகளை மறக்கின்றேன்..!

Sumankavi

சாவி தயாரிப்பவன்

Previous Post Next Post

Contact Form