ஒரு தென்றல் எனை சாய்த்தது..!

ஒரு தென்றல் எனை சாய்த்தது..!
அதன் மென்மை எனை உடைத்தது..!

இரும்பைப் போல நானிருந்தேன்... - அது
மெல்லிய தீயாய் நுழைந்தது..!
பாறையைப் போல நானிருந்தேன்... - அது
வேராய் என்னைப் பிழந்தது..!

ஒரு தென்றல் எனை சாய்த்தது..!
அதன் மென்மை எனை உடைத்தது..!
அதன் மென்மை எனை உடைத்தது..!

இதற்கு முன்னால் இப்படி நான்,
என்னை மறந்து நின்றதில்லை...
எவளின் அழகும் இவளைப்போல்,
இதயம் கடத்திச் சென்றதில்லை..!
இதயம் கடத்திச் சென்றதில்லை..!

ஒரு தென்றல் எனை சாய்த்தது..!
அதன் மென்மை எனை உடைத்தது..!
அதன் மென்மை எனை உடைத்தது..!

காற்றில் கலையும் கூந்தலிலே, - என்
மனதைக் கலைத்துப் போனவளே..!
ஒற்றைப் பார்வையில் மின்னலென,
உயிரைத் துளைத்துப் போனவளே..!
எடுத்துப் போனஎன் இதயத்தை,
பத்திரமாக வைத்துக்கொள்...
உன்னுடனேநான் தொடர்ந்துவர,
உறவாய் என்னை தைத்துக்கொள்... - உன்
உறவாய் என்னை தைத்துக்கொள்...

ஒரு தென்றல் எனை சாய்த்தது..!
அதன் மென்மை எனை உடைத்தது..!
அதன் மென்மை எனை உடைத்தது..!

Sumankavi

சாவி தயாரிப்பவன்

Previous Post Next Post

Contact Form