கோமாளி பொம்மை ஒண்ணு..!

கோமாளி பொம்மை ஒண்ணு,
ரெண்டு பேரு செஞ்சாங்க...
பொம்மைய தூக்கி வந்து,
அரியணையில் வச்சாங்க… - நாட்டின்
அரியணையில் வச்சாங்க...

சோளக்காட்டு பொம்மை இது,
ஆளப்போல இருக்கும்...
ஆட்சி செய்ய சொன்னாக்க,
ரீல்ஸு போட்டு நடிக்கும்..! - ஆமா
ரீல்ஸு போட்டு நடிக்கும்..!

கோமாளி பொம்மை ஒண்ணு,
ரெண்டு பேரு செஞ்சாங்க...
பொம்மைய தூக்கி வந்து,
அரியணையில் வச்சாங்க... - நாட்டின்
அரியணையில் வச்சாங்க...

ஆடாத ஆட்டமெல்லாம் ஆடுதடா இந்த பொம்ம...
அடுத்தவங்க மேல பழி போடுதடா இந்த பொம்ம...
சொந்தமாக சிந்திக்க எள்ளளவும் ஞானமில்ல.
மற்றவங்க சாதனைக்கு ஸ்டிக்கர் ஒட்ட கூச்சமில்ல.
பொல்லாத பொம்மையடா..! - இது
ஸ்க்ரிப்டிருந்தா ஆடுமடா..!
நெருக்கடி வந்துச்சுன்னா,
தலதெறிக்க ஓடுமடா... - ஆமா
நெருக்கடி வந்துச்சுன்னா,
தலதெறிக்க ஓடுமடா...

கோமாளி பொம்மை ஒண்ணு
ரெண்டு பேரு செஞ்சாங்க...
பொம்மைய தூக்கி வந்து,
அரியணையில் வச்சாங்க... - நாட்டின்
அரியணையில் வச்சாங்க...

நாட்டோட நெலம இப்ப நாசமாகிப் போயிடுச்சு...
வெலவாசி அத்தனையும் தாறுமாறா ஏறிடுச்சு...
பொம்மையோ இதுவரைக்கும்
பொறுப்புணர்ந்து நடக்கலியே..!
மக்களோட பிரச்சனைக்கு தீர்வேதும் கெடைக்கலியே..!
திமிராகப் பேசுறதும்,
திசைதிருப்பி மாத்துறதும்,
எதிர்க்கட்சி அத்தனைக்கும்,
வாய்ப்பூட்டு போடுறதும்,
பாசிசம் பெற்றெடுத்த,
பொம்மையோட வேலையடா...
பொதுமக்கள் வெகுண்டெழுந்தா,
மாற்றம் வரும் நாளையடா..! - நண்பா
மாற்றம் வரும் நாளையடா..!

கோமாளி பொம்மை ஒண்ணு
ரெண்டு பேரு செஞ்சாங்க...
பொம்மைய தூக்கி வந்து,
அரியணையில் வச்சாங்க... - நாட்டின்
அரியணையில் வச்சாங்க...

Sumankavi

சாவி தயாரிப்பவன்

Previous Post Next Post

Contact Form