இது ஒரு வேடிக்கை கதை - ஒரு
பொறுப்பற்ற மனிதனின் கதை
இதுவரை யாருக்கும் நம்பகமாக
இல்லாத ஒருவனின் கதை…
இது ஒரு வேடிக்கை கதை - ஒரு
பொறுப்பற்ற மனிதனின் கதை
மனைவிக்கு உண்மையாய் இருந்ததில்லை - அவன்
தகப்பனை முழுமையாய் மதித்ததில்லை.
உறவுகள் அவனுக்கு தொடர்பில் இல்லை - அவன்
யாருக்கும் நேர்மையாய் நடந்ததில்லை…
இது ஒரு வேடிக்கை கதை - ஒரு
பொறுப்பற்ற மனிதனின் கதை
இதுவரை யாருக்கும் நம்பகமாக
இல்லாத ஒருவனின் கதை…
படிப்பை பாதியில் நிறுத்தி விட்டான் - அவன்
நடிப்பதை அன்றே தொடங்கி விட்டான்
தேராத மகனென்று ஊரே சொன்னது,
தேற்றிய தகப்பனின் முயற்சி வேன்றது.
ஏறிய படிகளை உதறிவிட்டான் - தன்
தகப்பனை விட்டே விலகி விட்டான்…
இது ஒரு வேடிக்கை கதை - ஒரு
பொறுப்பற்ற மனிதனின் கதை
இதுவரை யாருக்கும் நம்பகமாக
இல்லாத ஒருவனின் கதை…
மனைவியை குழந்தையை பிரிந்து விட்டான் - தன்
மனம் போன படிசுற்றித் திரிந்து விட்டான்.
ஆசை நாயகி பக்கத்திலே - அவன்
அன்புக் குரியவள் துக்கத்திலே…
கல்யாண வயதில் பிள்ளைகளோ… - இவன்
கல்யாண மாப்பிள்ளை வேஷத்திலே…
இது ஒரு வேடிக்கை கதை - ஒரு
பொறுப்பற்ற மனிதனின் கதை
இதுவரை யாருக்கும் நம்பகமாக
இல்லாத ஒருவனின் கதை…
Tags:
Politics