வாழ்வுக்கு ஏதும் பொருளில்லை…

வாழ்வுக்கு ஏதும் பொரு ளில்லை… - அதை
தேடிப் பார்ப்பதும் பொரு ளில்லை…
இருப்பதை இயல்பாய் வாழ்ந்துவிடு
இல்லாதவற்றை மறந்துவிடு..

வாழ்வுக்கு ஏதும் பொரு ளில்லை… - அதை
தேடிப் பார்ப்பதும் பொரு ளில்லை…

கோடி கோடியாய் குவித்தவன் கூட
நிறைவடையாமல் தவிக்கின்றான்
இறுதி வரையிலும் எதையோ தேடி
ஓடிக்கொண்டே இருக்கின்றான்…
குழந்தை குட்டி பெற்றவனுக்கு
பொருளைச் சேர்க்க வழி இல்லை
பொருளைச் சேர்த்து முடித்தவன் வாழ்வில்
பிள்ளை குட்டி பெறவில்லை
யாருக்கும் இங்கே நிறைவில்லை
குறைகளுக் கிங்கே குறைவில்லை….

வாழ்வுக்கு ஏதும் பொரு ளில்லை… - அதை
தேடிப் பார்ப்பதும் பொரு ளில்லை…
இருப்பதை இயல்பாய் வாழ்ந்துவிடு
இல்லாதவற்றை மறந்துவிடு..

நெருக்கடி உன்னை துரத்தும் போது
குறுகிய காலத் திட்டமிடு
எதிர்வரும் காலம் எப்படி இருக்கும்
கற்பனை செய்வதை விட்டு விடு.
மகிழ்ச்சி உன்னை அணைக்கும் போது
முழுவதுமாக நனைந்து விடு
துயரம் உன்னை அழைக்கும் போது
சலன மற்றுக் கடந்து விடு…
எதுவும் இங்கே நிலை இல்லை
யாருக்கும் இங்கே நிறைவில்லை

வாழ்வுக்கு ஏதும் பொரு ளில்லை… - அதை
தேடிப் பார்ப்பதும் பொரு ளில்லை…
இருப்பதை இயல்பாய் வாழ்ந்துவிடு
இல்லாதவற்றை மறந்துவிடு..






Sumankavi

சாவி தயாரிப்பவன்

Previous Post Next Post

Contact Form