இது அழகிய சோஃபா..!

இது அழகிய சோஃபா - ஓர்
அற்புத சோஃபா
என் கனவைச் சிதைத்து
பதற்றம் விதைக்கும்
அதிசய சோஃபா … - இது
அதிசய சோஃபா …

பிறர் காசை கொடுத்து சோஃபா வாங்குவர்
நான் என்னை கொடுத்து சோஃபா வாங்கினேன் - என்
கொள்கையை கொடுத்து சோஃபா வாங்கினேன்
பிறரின் சோஃபா
தூக்கத்தை கொடுக்கும்.
எனது சோஃபா
தூக்கத்தை பறிக்கும்.

இது அழகிய சோஃபா - ஓர்
அற்புத சோஃபா
என் கனவைச் சிதைத்து
பதற்றம் விதைக்கும்
அதிசய சோஃபா … - இது
அதிசய சோஃபா …

கொள்கையை விற்று வாங்கிய சோஃபா…
கோட்பாட்டை விற்று வாங்கிய சோஃபா …
வாக்கை விற்று வாங்கிய சோஃபா - என்
வாழ்க்கையை விற்று வாங்கிய சோஃபா …
பிறரின் சோஃபா
தூக்கத்தை கொடுக்கும்.
எனது சோஃபா
தூக்கத்தைப் பறிக்கும்.

அம்பேத்கர் பெரியார்
பூலே எல்லாம்
சோஃபா வுக்குள் அடக்கம் - என்
சோஃபா வுக்குள் அடக்கம்.
சிறுத்தைகள் இனிமேல்
வாலைக் குழைத்து
தேட்டர் வாசலில் குறைக்கும்..! - இனி
தேட்டர் வாசலில் குறைக்கும்…

இது அழகிய சோஃபா - ஓர்
அற்புத சோஃபா
என் கனவை சிதைத்து
பதற்றம் விதைக்கும்
அதிசய சோஃபா …

Sumankavi

சாவி தயாரிப்பவன்

Previous Post Next Post

Contact Form