நான் ஒரு விளையாட்டு பொம்மை

நான் ஒரு விளையாட்டு பொம்மை
நான் ஒரு விளையாட்டு பொம்மை
அடுத்தவர் என்னை கையில் எடுத்து
ஆடி முடித்து வீசிச் செல்லும்
உயிரற்ற ஜடப்பொரு ளாக
மதிப்பற்றுக் கிடப்பத னாலே

நான் ஒரு விளையாட்டு பொம்மை
நான் ஒரு விளையாட்டு பொம்மை

எனக்கும் உணர்வுகள் உண்டு
ஆசைகள் கனவுகள் உண்டு
யார் தான் அறிவார் இங்கு - அதை
யார் தான் அறிவார் இங்கு
தங்களின் பைகள் நிறைந்தால் போதும்
தங்களின் ஏக்கம் மறைந்தால் போதும்
என்கிற கூட்டம் இருக்கிற வரையில் - பிறரை
உண்கிற கூட்டம் இருக்கிற வரையில்

நான் ஒரு விளையாட்டு பொம்மை
நான் ஒரு விளையாட்டு பொம்மை
அடுத்தவர் என்னை கையில் எடுத்து
ஆடி முடித்து வீசிச் செல்லும்
வேடிக்கையான பொம்மை…

ஆசை, கோபம் எல்லாம்
ஆட்டத்தில் இங்கே ஒரு பகுதி
புன்னகை கண்ணீர் எல்லாம்
ஆட்டத்தில் என்றும் எழுதாத விதி
நானும் தொடர்ந்து பார்த்து விட்டேன்
பதுமையாய் வாழப் பழகி விட்டேன்
என்னை வைத்து, ஆடும் இந்த,
கேமை, இப்போது நானே இருந்து,
வேடிக்கை பார்க்கத் தொடங்கி விட்டேன் - ஆம்
வேடிக்கை பார்க்கத் தொடங்கி விட்டேன்

நான் ஒரு விளையாட்டு பொம்மை
நான் ஒரு விளையாட்டு பொம்மை
அடுத்தவர் என்னை கையில் எடுத்து
ஆடி முடித்து வீசிச் செல்லும்
வேடிக்கையான பொம்மை… 






Sumankavi

சாவி தயாரிப்பவன்

Previous Post Next Post

Contact Form