கண்களின் உணவு நீ..!

கண்களின் உணவு நீ - என்
கண்களின் உணவு நீ
கற்பனை வானம் நீ - என்
கற்பனை வானம் நீ

பறவையாய் உனக்குள்ளே
பறக்கிறேனடி ..!
சிந்தனைச் சிறகுகள்
விரிக்கிறேனடி
என்னையே நான் கொஞ்சம்
மறக்கிறேனடி..!

கண்களின் உணவு நீ - என்
கண்களின் உணவு நீ

சில நொடி பார்த்த உன் பார்வைகளை
பல கோடி முறை என்னுள் நினைக்கிறேனடி
நீ சொன்ன ஓரிரு வார்த்தைகளை
மறுபடி மறுபடி கேட்கிறேனடி
எனக்குள்ளே மறுபடியும் கேட்கிறேனடி
ஒரு கணம் சுவாசித்த மல்லிகை வாசம்
இப்போதும் எனக்குள்ளே மணக்கின்றது
அலையற்ற கடலுள் ஓடம் போல
அன்பே உன் நினைவுகள் மிதக்கின்றது.
அன்பே உன் நினைவுகள் மிதக்கின்றது.

கண்களின் உணவு நீ - என்
கண்களின் உணவு நீ
கற்பனை வானம் நீ - என்
கற்பனை வானம் நீ

பறவையாய் உனக்குள்ளே
பறக்கிறேனடி ..!
சிந்தனைச் சிறகுகள்
விரிக்கிறேனடி
என்னையே நான் கொஞ்சம்
மறக்கிறேனடி..!

என் நிலை இவ்வாறு உள்ளதென்று
யார் வந்து உன்னிடம் கூறுவது
எப்போது உன் மனம் மாறுவது
யார் வந்து உன்னிடம் கூறுவது
எப்போது உன் மனம் மாறுவது
தனிமையின் சிறையிலே கைதியானேன்
வாங்காத இதழிலே செய்தி ஆனேன் - யாரும்
வாங்காத இதழிலே செய்தி ஆனேன்

கண்களின் உணவு நீ - என்
கண்களின் உணவு நீ
கற்பனை வானம் நீ - என்
கற்பனை வானம் நீ

பறவையாய் உனக்குள்ளே
பறக்கிறேனடி ..!
சிந்தனைச் சிறகுகள்
விரிக்கிறேனடி
என்னையே நான் கொஞ்சம்
மறக்கிறேனடி..!

Sumankavi

சாவி தயாரிப்பவன்

Previous Post Next Post

Contact Form