மலை போல் இருந்த ராட்சச யானையை...

மலை போல் இருந்த ராட்சச யானையை
எறும்புகள் வீழ்த்திய கதை இது
அதுதான் இப்போது நடக்கிறது
அதிகாரம் சரிந்து கிடக்கிறது...! - சர்வ
அதிகாரம் சரிந்து கிடக்கிறது...!

நாடாளு மன்றத்தை வளைத்தார்கள்
நீதித் துறையையும் வளைத்தார்கள்
எதிர்க்கட் சிகளை கலைத்தார்கள்
மமதையில் ஊறி திளைத்தார்கள்
தாங்கள் வைத்ததே சட்டமென
தறிகெட்டு ஆட்டம் போட்டார்கள்
எல்லாம் நொடியில் முடிந்தது
மாணவர் போராட்டம் எழுந்தது
எல்லாம் நொடியில் முடிந்தது
மாணவர் போராட்டம் எழுந்தது
எதற்கும் அசையா மலைகளை இன்று
உளிகள் தகர்த்து எறிந்தது - சிறு
உளிகள் தகர்த்து எறிந்தது

மலை போல் இருந்த ராட்சச யானையை
எறும்புகள் வீழ்த்திய கதை இது
அதுதான் இப்போது நடக்கிறது
அதிகாரம் சரிந்து கிடக்கிறது...! - சர்வ
அதிகாரம் சரிந்து கிடக்கிறது...!

யாரும் இவர்களை அசைப்பதற்கு
இயலாது என்ற கற்பனையை
இளைஞர்கள் உடைத்து எறிந்தார்கள் - நம்
இளைஞர்கள் உடைத்து எறிந்தார்கள்
ஒன்று கூடினால் முடியுமென்று
உண்மையை உலகுக்குப் பறைந்தார்கள்
ஓங்கி முரசு அறைந்தார்கள்
நாடாளுமன்றத்தில் முடியாத காரியம் - அதன்
வாசலில் வைத்தே முடிந்தது - இது
வாலிபர் எழுச்சியால் முடிந்தது - நம்
வாலிபர் எழுச்சியால் முடிந்தது..!

மலை போல் இருந்த ராட்சச யானையை
எறும்புகள் வீழ்த்திய கதை இது
அதுதான் இப்போது நடக்கிறது
அதிகாரம் சரிந்து கிடக்கிறது...! - சர்வ
அதிகாரம் சரிந்து கிடக்கிறது...!

Sumankavi

சாவி தயாரிப்பவன்

Previous Post Next Post

Contact Form