மேலே இருக்கும் மமதையில் நீயும்
ஆட்டம் போடாதே..!
மேலே இருப்பது கீழே விழலாம்
மறந்து போகாதே..! - அதைநீ
மறந்து போகாதே..!
எளியவரெல்லாம் எளியவராக
எல்லா நாளும் இருப்பதில்லை...
வலியவரெல்லாம் வல்லமை யோடு
வாழ்நாள் முழுதும் நிலைப்பதில்லை... - ஆம்
வாழ்நாள் முழுதும் நிலைப்பதில்லை...
திமிங்கலம் கூட சிறுசிறு மீன்களால்
தின்னப் படுவதை அறிவாயா..! - இறுதியில்
தின்னப் படுவதை அறிவாயா..!
வாழ்க்கை மாபெரும் வட்டம் என்பதை
இயற்கையைக் கண்டு தெளிவாயா..? - இந்த
இயற்கையைக் கண்டு தெளிவாயா..?
மேலே இருக்கும் மமதையில் நீயும்
ஆட்டம் போடாதே..!
மேலே இருப்பது கீழே விழலாம்
மறந்து போகாதே..! - அதைநீ
மறந்து போகாதே..!
ஒடுக்கும் ஆற்றல் இருக்கிற போது
உன்னை நீயே பரிசோதி
ஒடுக்கப் படுபவன் கூட உனது
சமூக வாழ்வில் சரிபாதி...
சமூக வாழ்வில் சரிபாதி...
பிறரின் வலியை தனதென உணர
பறவையின் அறிவு போதுமடா..! - சிறு
பறவையின் அறிவு போதுமடா..!
வலிமை குன்றிநீ வீழ்கிற போது
அடுத்தவன் தூக்க வேணுமடா..! - உன்னை
அடுத்தவன் தூக்க வேணுமடா..!
மேலே இருக்கும் மமதையில் நீயும்
ஆட்டம் போடாதே..!
மேலே இருப்பது கீழே விழலாம்
மறந்து போகாதே..! - அதைநீ
மறந்து போகாதே..!