பாம்புகள் உன்னிடம் தோற்றுவிடும்..!

பாம்புகள் உன்னிடம் தோற்றுவிடும் - விஷ
பாம்புகள் உன்னிடம் தோற்றுவிடும். - அதன்
பல்லில் மட்டுமே விஷமுண்டு - உன்
சொல்லிலும் செயலிலும் விஷமுண்டு

அதனால்

பாம்புகள் உன்னிடம் தோற்றுவிடும் - விஷ
பாம்புகள் உன்னிடம் தோற்றுவிடும்..!

நெஞ்சத்தில் வஞ்சத்தை புதைத்திருப்பாய் - அதை
வார்த்தையில் நயமாய் விதைத்திருப்பாய்
நல்லவன் போல நடித்திருப்பாய் - உன்
நரித்தனம் அனைத்தையும் மறைத்திருப்பாய்
காலம் கனிந்து வரும்போது - உன்
கபட நாடகம் முடிந்துவிடும். - உன்
கபட நாடகம் முடிந்துவிடும்.
வேலையைக் காட்டத் தொடங்குவாய் - உன்
விஷத்தை உமிழத் தொடங்குவாய்..!
பலமுறை நானும் பார்த்துவிட்டேன் - இந்தப்
படுகுழிக்குள்ளே வீழ்ந்துவிட்டேன்
திருந்தும் இயல்பு எனக்கில்லை
வருந்தும் குணமோ உனக்கில்லை

அதனால்

பாம்புகள் உன்னிடம் தோற்றுவிடும் - விஷ
பாம்புகள் உன்னிடம் தோற்றுவிடும். - அதன்
பல்லில் மட்டுமே விஷமுண்டு - உன்
சொல்லிலும் செயலிலும் விஷமுண்டு - ஆம்
சொல்லிலும் செயலிலும் விஷமுண்டு.

உன் சிரிப்பும் அணைப்பும் வெளிவேஷம்
உன் உள்ளே இருப்பது துவேஷம்
நீ பேசுவதெல்லாம் சர்க்கரையாய்
நீ நடிப்பாய் மிகவும் அக்கறையாய்
நீ புன்னகை என்ற போர்வைக்குள்
பொறிகளை மறைத்து வைத்திருப்பாய்
நான் எலியைப் போல அறிவற்று
உன் புன்னகை பொறியில் மாட்டுகிறேன்
உன் புன்னகை பொறியில் மாட்டுகிறேன்

ஆயிரம் முறை நான் பட்டாலும்
அறிவோ எனக்கு வரவில்லை
அறிவோ எனக்கு வரவில்லை. - என்
அறிவற்ற நிலையை பார்த்த பின்னும்
அனுதாபம் உனக்கு வரவில்லை - என்மேல்
அனுதாபம் உனக்கு வரவில்லை.

அதனால்

பாம்புகள் உன்னிடம் தோற்றுவிடும் - விஷ
பாம்புகள் உன்னிடம் தோற்றுவிடும். - அதன்
பல்லில் மட்டுமே விஷமுண்டு - உன்
சொல்லிலும் செயலிலும் விஷமுண்டு - ஆம்
சொல்லிலும் செயலிலும் விஷமுண்டு.




Sumankavi

சாவி தயாரிப்பவன்

Previous Post Next Post

Contact Form