பூமி எங்கிலும் அதிசயங்கள்
புரியா பலபல ரகசியங்கள்
புலன்கள் அனைத்தும் திறந்து வைத்து
பூமியின் புதுமையை அனுபவிப்பேன்..! - அவை
எனக்குள் மலர அனுமதிப்பேன்..!
பூமி எங்கிலும் அதிசயங்கள்
புரியா பலபல ரகசியங்கள்
(புரியா பலபல ரகசியங்கள்)
வானம் முழுதும் விரிந்து கிடக்கும்
விண்மீன் கூட்டங்கள் - அவை
பூமிப் பந்தை உற்றுப் பார்க்கும்
அழகிய நோட்டங்கள்...
கூட்டம் நிறைந்த வீதியில் தோன்றும்,
ஒற்றைத் தேர் போல
விண்மீன் நடுவே பவனி செல்லும்
வெண்ணி லாவைப் பாராய் - அது
வார்த்தைக ளின்றி ஒளியால் பேசும்
ரகசிய மொழி கேளாய்... - நெஞ்சே
ரகசிய மொழி கேளாய்...
பூமி எங்கிலும் அதிசயங்கள்
புரியா பலபல ரகசியங்கள்
(புரியா பலபல ரகசியங்கள்)
பூக்களின் காதில் வண்டுகள் பேசும்
சங்கதி என்ன தெரியாது
அலைகள் தினமும் கரையில் மோதி
தருகிற சேதி புரியாது
காற்றுடன் மோதி இலைகள் சொல்லும்
கவிதைகள் மெல்ல கேட்கிறது - அதன்
கருத்தை விளங்க முடியாமல் என்
மொழியும் கூட தோற்க்கிறது..!
(மொழியும் கூட தோற்க்கிறது..!)
பூமி எங்கிலும் அதிசயங்கள்
புரியா பலபல ரகசியங்கள்
புலன்கள் அனைத்தும் திறந்து வைத்து
பூமியின் புதுமையை அனுபவிப்பேன்..! - அவை
எனக்குள் மலர அனுமதிப்பேன்..!
எனக்குள் மலர அனுமதிப்பேன்..!
புரியா பலபல ரகசியங்கள்
புலன்கள் அனைத்தும் திறந்து வைத்து
பூமியின் புதுமையை அனுபவிப்பேன்..! - அவை
எனக்குள் மலர அனுமதிப்பேன்..!
பூமி எங்கிலும் அதிசயங்கள்
புரியா பலபல ரகசியங்கள்
(புரியா பலபல ரகசியங்கள்)
வானம் முழுதும் விரிந்து கிடக்கும்
விண்மீன் கூட்டங்கள் - அவை
பூமிப் பந்தை உற்றுப் பார்க்கும்
அழகிய நோட்டங்கள்...
கூட்டம் நிறைந்த வீதியில் தோன்றும்,
ஒற்றைத் தேர் போல
விண்மீன் நடுவே பவனி செல்லும்
வெண்ணி லாவைப் பாராய் - அது
வார்த்தைக ளின்றி ஒளியால் பேசும்
ரகசிய மொழி கேளாய்... - நெஞ்சே
ரகசிய மொழி கேளாய்...
பூமி எங்கிலும் அதிசயங்கள்
புரியா பலபல ரகசியங்கள்
(புரியா பலபல ரகசியங்கள்)
பூக்களின் காதில் வண்டுகள் பேசும்
சங்கதி என்ன தெரியாது
அலைகள் தினமும் கரையில் மோதி
தருகிற சேதி புரியாது
காற்றுடன் மோதி இலைகள் சொல்லும்
கவிதைகள் மெல்ல கேட்கிறது - அதன்
கருத்தை விளங்க முடியாமல் என்
மொழியும் கூட தோற்க்கிறது..!
(மொழியும் கூட தோற்க்கிறது..!)
பூமி எங்கிலும் அதிசயங்கள்
புரியா பலபல ரகசியங்கள்
புலன்கள் அனைத்தும் திறந்து வைத்து
பூமியின் புதுமையை அனுபவிப்பேன்..! - அவை
எனக்குள் மலர அனுமதிப்பேன்..!
எனக்குள் மலர அனுமதிப்பேன்..!