காவிரியா திரிஷாவா..?

காவிரியா திரிஷாவா
யாரு முக்கியம்..? - அரசுக்கு
யாரு முக்கியம்..?
காவிரிய தள்ளிவிடு
திரிஷாவ கையிலெடு
பிரச்சனைய மறந்துடுவான் மக்கள் - இவங்க
இப்படித்தான் தீக்குறாங்க சிக்கல்
(மக்களோட சிக்கல்)

காவிரியா திரிஷாவா
யாரு முக்கியம்..? - (அரசுக்கு
யாரு முக்கியம்..?)

குருவைக்கு நீரில்ல குமுறுறான் விவசாயி
நிவாரணம் வேணுமுன்னு நிக்கிறான் விவசாயி
எதையுமே நீங்க ஏரெடுத்துப் பாக்கல
காவிரி பிரச்சனைய கவனிச்சித் தீக்கல
தானா மழை பெஞ்சு தண்ணி வந்து சேருமுன்ன
வீணாப் போனதைய்யா வெள்ளாம - இதுக்கு
மேலையும் எங்கள கொல்லாம
செயலாற்றும் அரசாங்கம் வேணும் - இல்ல
சீட்ட விட்டு காலிபண்ண வேணும் - நீங்க
சீட்ட விட்டு காலிபண்ண வேணும்

காவிரியா திரிஷாவா
யாரு முக்கியம்..? - அரசுக்கு
யாரு முக்கியம்..?
காவிரிய தள்ளிவிடு
திரிஷாவ கையிலெடு
பிரச்சனைய மறந்துடுவான் மக்கள் - இவங்க
இப்படித்தான் தீக்குறாங்க சிக்கல்
(மக்களோட சிக்கல்)

ஆடிப் பெருக்கப்ப ஆத்துல தண்ணியில்ல
வாடி நின்ன மக்கள் வாழ்க்கையில் ஈரமில்ல
மக்களுக்கு ஆதரவா வாய்திறக்க வக்கில்ல
எதிர்கட்சி கொதவளைய நெரிக்கிறது தப்புல்ல - நீங்க
நெரிக்கிறது தப்புல்ல…!
கொஞ்சமாச்சும் உணருங்கய்யா இப்ப… - நீங்க
திருந்திவேல செய்யுறது எப்ப?
(சொல்லுங்க எப்ப..?)

காவிரியா திரிஷாவா
யாரு முக்கியம்..? - அரசுக்கு
யாரு முக்கியம்..?
காவிரிய தள்ளிவிடு
திரிஷாவ கையிலெடு
பிரச்சனைய மறந்துடுவான் மக்கள் - இவங்க
இப்படித்தான் தீக்குறாங்க சிக்கல்
மக்களோட சிக்கல்



Sumankavi

சாவி தயாரிப்பவன்

Previous Post Next Post

Contact Form