வீழ்ந்தால் தான் தெரியும். - நாம்
வீழ்ந்தால் தான் தெரியும்.
எத்தனை கால்கள் நமக்காய் ஓடி வரும்,
எத்தனை கரங்கள் நம்மை தூக்க வரும்,
என்பது ஒரு முறை,
வீழ்ந்தால் தான் தெரியும். - நாம்
வீழ்ந்தால் தான் தெரியும்..
இந்தக் கைகள் என்னை தூக்கி
நிறுத்தும் என்று நம்பிய கைகள்,
வீழ்ந்த போது வராமல் போகலாம்..! - நாம்
வீழ்ந்த போது வராமல் போகலாம்..!
எங்கிருந்தோ சில அந்நிய கைகள்,
முன்பின் நாமும் அறியா கைகள்,
உரிய காலத்தில் உதவிக்கு வரலாம்...
உணர்வுடன் நம்மை உயர்த்தி விடலாம்…
இதற்காகவாவது விழ வேண்டும். - ஆம்
இதற்காகவாவது விழ வேண்டும்.
யார் வந்து நம்மை தூக்குவார்?
யார் நம்மை விட்டு விலகுவார்?
என்கிற உண்மையை அறிவதற்காவது,
ஒருமுறை நாமும் விழ வேண்டும். - வாழ்வில்
ஒருமுறை சறுக்கி விழ வேண்டும்.
வீழ்ந்தால் தான் தெரியும். - நாம்
வீழ்ந்தால் தான் தெரியும்.
எத்தனை கால்கள் நமக்காய் ஓடி வரும்,
எத்தனை கரங்கள் நம்மை தூக்க வரும்,
என்பது ஒரு முறை,
வீழ்ந்தால் தான் தெரியும்...!
அண்ணா, அண்ணா என்று நம்முடன்,
அன்பாய் உருகிப் பேசுவான்; - பல
ஆறுதல் வார்த்தைகள் கூறுவான்,
இவன்தான் நமக்கு இறுதி வரையில்,
வருவான் என்று நினைத்திருப்பாய்..! - உதவி
தருவான் என்று நினைத்திருப்பாய்..!
ஆபத்து நாளில் அவன் தான் முதலில்,
காணாமல் போவதைக் கண்டு கொள்வாய்… - அவன்
காணாமல் போவதைக் கண்டு கொள்வாய்…
இந்த அதிசய உறவை அளப்பதற் காவது,
ஒரு முறையேனும் விழ வேண்டும்..! - நீ
ஒரு முறையேனும் விழ வேண்டும்..!
வீழ்ந்தால் தான் தெரியும். - நாம்
வீழ்ந்தால் தான் தெரியும்.
எத்தனை கால்கள் நமக்காய் ஓடி வரும்,
எத்தனை கரங்கள் நம்மை தூக்க வரும்,
என்பது ஒரு முறை
வீழ்ந்தால் தான் தெரியும்...!
எவரும் நமக்கு இல்லை என்பதை,
நாம் தான் நமக்கு உதவி என்பதை,
அறிந்து கொள்ள வேண்டுமெனில்…
அதற்காகவாவது விழ வேண்டும். - ஆம்
அதற்காகவாவது விழ வேண்டும்.
கொஞ்சம் வலுவாய் முயன்றால் போதும்,
நாமே எழுந்து விடலாம் என்கிற,
உண்மையை அறிந்து கொள்வதற்கு… - நம்
ஆற்றலை உணர்ந்து கொள்வதற்கு…
ஒரு முறையேனும் விழ வேண்டும். - நீ
ஒரு முறையேனும் விழ வேண்டும்..!
வீழ்ந்தால் தான் தெரியும்.
எத்தனை கால்கள் நமக்காய் ஓடி வரும்,
எத்தனை கரங்கள் நம்மை தூக்க வரும்,
என்பது ஒரு முறை,
வீழ்ந்தால் தான் தெரியும். - நாம்
வீழ்ந்தால் தான் தெரியும்..
இந்தக் கைகள் என்னை தூக்கி
நிறுத்தும் என்று நம்பிய கைகள்,
வீழ்ந்த போது வராமல் போகலாம்..! - நாம்
வீழ்ந்த போது வராமல் போகலாம்..!
எங்கிருந்தோ சில அந்நிய கைகள்,
முன்பின் நாமும் அறியா கைகள்,
உரிய காலத்தில் உதவிக்கு வரலாம்...
உணர்வுடன் நம்மை உயர்த்தி விடலாம்…
இதற்காகவாவது விழ வேண்டும். - ஆம்
இதற்காகவாவது விழ வேண்டும்.
யார் வந்து நம்மை தூக்குவார்?
யார் நம்மை விட்டு விலகுவார்?
என்கிற உண்மையை அறிவதற்காவது,
ஒருமுறை நாமும் விழ வேண்டும். - வாழ்வில்
ஒருமுறை சறுக்கி விழ வேண்டும்.
வீழ்ந்தால் தான் தெரியும். - நாம்
வீழ்ந்தால் தான் தெரியும்.
எத்தனை கால்கள் நமக்காய் ஓடி வரும்,
எத்தனை கரங்கள் நம்மை தூக்க வரும்,
என்பது ஒரு முறை,
வீழ்ந்தால் தான் தெரியும்...!
அண்ணா, அண்ணா என்று நம்முடன்,
அன்பாய் உருகிப் பேசுவான்; - பல
ஆறுதல் வார்த்தைகள் கூறுவான்,
இவன்தான் நமக்கு இறுதி வரையில்,
வருவான் என்று நினைத்திருப்பாய்..! - உதவி
தருவான் என்று நினைத்திருப்பாய்..!
ஆபத்து நாளில் அவன் தான் முதலில்,
காணாமல் போவதைக் கண்டு கொள்வாய்… - அவன்
காணாமல் போவதைக் கண்டு கொள்வாய்…
இந்த அதிசய உறவை அளப்பதற் காவது,
ஒரு முறையேனும் விழ வேண்டும்..! - நீ
ஒரு முறையேனும் விழ வேண்டும்..!
வீழ்ந்தால் தான் தெரியும். - நாம்
வீழ்ந்தால் தான் தெரியும்.
எத்தனை கால்கள் நமக்காய் ஓடி வரும்,
எத்தனை கரங்கள் நம்மை தூக்க வரும்,
என்பது ஒரு முறை
வீழ்ந்தால் தான் தெரியும்...!
எவரும் நமக்கு இல்லை என்பதை,
நாம் தான் நமக்கு உதவி என்பதை,
அறிந்து கொள்ள வேண்டுமெனில்…
அதற்காகவாவது விழ வேண்டும். - ஆம்
அதற்காகவாவது விழ வேண்டும்.
கொஞ்சம் வலுவாய் முயன்றால் போதும்,
நாமே எழுந்து விடலாம் என்கிற,
உண்மையை அறிந்து கொள்வதற்கு… - நம்
ஆற்றலை உணர்ந்து கொள்வதற்கு…
ஒரு முறையேனும் விழ வேண்டும். - நீ
ஒரு முறையேனும் விழ வேண்டும்..!