எதிர்காலம் உந்தன் கைகளில் தோழா..!

எதிர்காலம் உந்தன் கைகளில் தோழா
எதற்கும்நீ அஞ்சாமல் நடை போடடா..!
நிகழ்கால சோகம் நிலையானதில்லை
நிச்சயம் முடிவுண்டு எதிர்கொள்ளடா..!

எதிர்காலம் உந்தன் கைகளில் தோழா
எதற்கும்நீ அஞ்சாமல் நடை போடடா..!
இப்பொழுதே இக்கணமே நடை போடடா..!

பெரிதாக எதையும் கற்பனை செய்தால்
மலை போல நெஞ்சுக்குள் தோன்றும் மடா…!
மலை கூட பெரிதல்ல நம்பிக்கை கொண்டால்
சிற்றுளி மலையையும் சிதைக்கும் மடா..!
வெறிகொண்ட வேங்கை போல் படைகொள்ளடா
சிறுநரி கூட்டத்தை எதிர்கொள்ளடா
பேச்சுக்கு இடமில்லை
செயலுக்கே இடமுண்டு
கோதாவில் இறங்கிநீ விளையாடடா..! - ஆம்
கோதாவில் இறங்கிநீ விளையாடடா..!

எதிர்காலம் உந்தன் கைகளில் தோழா
எதற்கும்நீ அஞ்சாமல் நடை போடடா..!
நிகழ்கால சோகம் நிலையானதில்லை
நிச்சயம் முடிவுண்டு எதிர்கொள்ளடா..!

அதிகாரம் எதிரியின் கைகளில் உள்ளதால்..!
அடிபணிந் திடுவது முறையாகுமா..!
ஆமை போல் அனைத்தையும்
அடக்கி நீ வாழ்வது மானிடப் பிறவிக்கு அழகாகுமா..!
மானமும் அறிவுமே மனிதனுக் கழகென்று
சொன்ன நம் பாட்டனின் நெறி நில்லடா
சுயமரியாதையின் வழிநில்லடா..! - நம்
சுயமரியாதையின் வழிநில்லடா..!

எதிர்காலம் உந்தன் கைகளில் தோழா
எதற்கும்நீ அஞ்சாமல் நடை போடடா..!
நிகழ்கால சோகம் நிலையானதில்லை
நிச்சயம் முடிவுண்டு எதிர்கொள்ளடா..! 


Sumankavi

சாவி தயாரிப்பவன்

Previous Post Next Post

Contact Form