உங்களின் இரவு எங்களின் பகல்
எங்களின் இரவு உங்களின் பகல்
கார்களில் நீங்கள் சுகமாய் செல்ல
சாலை போட்டது நாங்கள்..!
காலையில் நீங்கள் அறியாபடிக்கு
சுத்தம் செய்தவர் நாங்கள்..! - இரவில்
சுத்தம் செய்தவர் நாங்கள்..!
ஸ்லீப்பரில் செல்லும் பயணி அறியான்
ஸ்லீப்பிங் இல்லாத எங்கள் இரவை
தண்டவாளத்தில் இரவில் செல்வது
ரயில்கள் மட்டும் அல்ல
எங்கள் வாழ்வும் எங்கள் உழைப்பும்
என்பதை யார் தான் சொல்ல - இந்த
உண்மையை யார்தான் சொல்ல..!
உங்களின் இரவு எங்களின் பகல்
எங்களின் இரவு உங்களின் பகல்
கார்களில் நீங்கள் சுகமாய் செல்ல
சாலை போட்டது நாங்கள்..!
காலையில் நீங்கள் அறியாபடிக்கு
சுத்தம் செய்தவர் நாங்கள்..! - இரவில்
சுத்தம் செய்தவர் நாங்கள்..!
பயிருக்குக் காவல் எங்கள் இரவு - உங்கள்
உயிருக்கும் காவல் எங்கள் இரவு
பாலில் இருந்து பேப்பர் வரைக்கும்
காலையில் வருகிற பொருட்கள் அனைத்தும்
லாரியில் வருகிற தென்றோ - அதை
ஓட்டிய தொருவன் என்றோ
யார்தான் நினைப்பார் இங்கே..! - எங்களை
யார்தான் நினைப்பார் இங்கே..!
உங்களின் இரவு எங்களின் பகல்
எங்களின் இரவு உங்களின் பகல்
கார்களில் நீங்கள் சுகமாய் செல்ல
சாலை போட்டது நாங்கள்..!
காலையில் நீங்கள் அறியாபடிக்கு
சுத்தம் செய்தவர் நாங்கள்..! - இரவில்
சுத்தம் செய்தவர் நாங்கள்..!
எங்களின் இரவு உங்களின் பகல்
கார்களில் நீங்கள் சுகமாய் செல்ல
சாலை போட்டது நாங்கள்..!
காலையில் நீங்கள் அறியாபடிக்கு
சுத்தம் செய்தவர் நாங்கள்..! - இரவில்
சுத்தம் செய்தவர் நாங்கள்..!
ஸ்லீப்பரில் செல்லும் பயணி அறியான்
ஸ்லீப்பிங் இல்லாத எங்கள் இரவை
தண்டவாளத்தில் இரவில் செல்வது
ரயில்கள் மட்டும் அல்ல
எங்கள் வாழ்வும் எங்கள் உழைப்பும்
என்பதை யார் தான் சொல்ல - இந்த
உண்மையை யார்தான் சொல்ல..!
உங்களின் இரவு எங்களின் பகல்
எங்களின் இரவு உங்களின் பகல்
கார்களில் நீங்கள் சுகமாய் செல்ல
சாலை போட்டது நாங்கள்..!
காலையில் நீங்கள் அறியாபடிக்கு
சுத்தம் செய்தவர் நாங்கள்..! - இரவில்
சுத்தம் செய்தவர் நாங்கள்..!
பயிருக்குக் காவல் எங்கள் இரவு - உங்கள்
உயிருக்கும் காவல் எங்கள் இரவு
பாலில் இருந்து பேப்பர் வரைக்கும்
காலையில் வருகிற பொருட்கள் அனைத்தும்
லாரியில் வருகிற தென்றோ - அதை
ஓட்டிய தொருவன் என்றோ
யார்தான் நினைப்பார் இங்கே..! - எங்களை
யார்தான் நினைப்பார் இங்கே..!
உங்களின் இரவு எங்களின் பகல்
எங்களின் இரவு உங்களின் பகல்
கார்களில் நீங்கள் சுகமாய் செல்ல
சாலை போட்டது நாங்கள்..!
காலையில் நீங்கள் அறியாபடிக்கு
சுத்தம் செய்தவர் நாங்கள்..! - இரவில்
சுத்தம் செய்தவர் நாங்கள்..!