அணுவை விடவும் கொடியது உந்தன்
விழிகள் சிந்தும் கண்ணீர்…!
அணுவால் சாதிக்க முடியாத வற்றையும்
அதனால் சாதிக்க முடிகிறது - என்
இதயத்தை பாதிக்க முடிகிறது..!
அதனால்..!
அணுவை விடவும் கொடியது உந்தன்
விழிகள் சிந்தும் கண்ணீர்…!
அன்பே..! - உன்
விழிகள் சிந்தும் கண்ணீர்…!
இரும்புக் கோட்டையைக் கூட அதனால்
எளிதில் உடைக்க முடிகிறது.
எதற்கும் அடங்காத் திமிரும் கூட
நொடியில் தகர்ந்து விடுகிறது..!
வலிமையான ஆயுத மதனை
எளிதில் நீயும் எடுப்பதில்லை
விழிகள் நிரம்பி வழிகிற போது
எதிர்த்துப் போரிட முடிவதில்லை - என்னால்
எதிர்த்துப் போரிட முடிவதில்லை..!
அதனால்
அணுவை விடவும் கொடியது உந்தன்
விழிகள் சிந்தும் கண்ணீர்…!
அணுவால் சாதிக்க முடியாத வற்றையும்
அதனால் சாதிக்க முடிகிறது - என்
இதயத்தை பாதிக்க முடிகிறது..!
முற்றும் வார்த்தையின் முடிவில் கண்கள்
முத்துச் சரங்களை உதிர்க்கிறது.
அத்தனை வாதமும் அடிபட்டுப் போக
ஒற்றைத் துளியால் கனக்கிறது - இதயம்
ஒற்றைத் துளியால் கனக்கிறது
தோற்றுப் போவதின் சுகத்தை உந்தன்
கண்ணீர் கற்றுத் தருகிறது..!
தோற்றவன் வெல்வதும்
வென்றவள் தோற்பதும்
காதலில் தானே முடிகிறது - உண்மை
காதலில் தானே முடிகிறது.
அணுவை விடவும் கொடியது உந்தன்
விழிகள் சிந்தும் கண்ணீர்…!
அணுவால் சாதிக்க முடியாத வற்றையும்
அதனால் சாதிக்க முடிகிறது - என்
இதயத்தை பாதிக்க முடிகிறது..!
விழிகள் சிந்தும் கண்ணீர்…!
அணுவால் சாதிக்க முடியாத வற்றையும்
அதனால் சாதிக்க முடிகிறது - என்
இதயத்தை பாதிக்க முடிகிறது..!
அதனால்..!
அணுவை விடவும் கொடியது உந்தன்
விழிகள் சிந்தும் கண்ணீர்…!
அன்பே..! - உன்
விழிகள் சிந்தும் கண்ணீர்…!
இரும்புக் கோட்டையைக் கூட அதனால்
எளிதில் உடைக்க முடிகிறது.
எதற்கும் அடங்காத் திமிரும் கூட
நொடியில் தகர்ந்து விடுகிறது..!
வலிமையான ஆயுத மதனை
எளிதில் நீயும் எடுப்பதில்லை
விழிகள் நிரம்பி வழிகிற போது
எதிர்த்துப் போரிட முடிவதில்லை - என்னால்
எதிர்த்துப் போரிட முடிவதில்லை..!
அதனால்
அணுவை விடவும் கொடியது உந்தன்
விழிகள் சிந்தும் கண்ணீர்…!
அணுவால் சாதிக்க முடியாத வற்றையும்
அதனால் சாதிக்க முடிகிறது - என்
இதயத்தை பாதிக்க முடிகிறது..!
முற்றும் வார்த்தையின் முடிவில் கண்கள்
முத்துச் சரங்களை உதிர்க்கிறது.
அத்தனை வாதமும் அடிபட்டுப் போக
ஒற்றைத் துளியால் கனக்கிறது - இதயம்
ஒற்றைத் துளியால் கனக்கிறது
தோற்றுப் போவதின் சுகத்தை உந்தன்
கண்ணீர் கற்றுத் தருகிறது..!
தோற்றவன் வெல்வதும்
வென்றவள் தோற்பதும்
காதலில் தானே முடிகிறது - உண்மை
காதலில் தானே முடிகிறது.
அணுவை விடவும் கொடியது உந்தன்
விழிகள் சிந்தும் கண்ணீர்…!
அணுவால் சாதிக்க முடியாத வற்றையும்
அதனால் சாதிக்க முடிகிறது - என்
இதயத்தை பாதிக்க முடிகிறது..!