என்னைத் தனியே விட்டு விடுங்கள்..!

என்னைத் தனியே விட்டு விடுங்கள்..!
ஏக்கம் தீர புலம்ப விடுங்கள்…
என்னைத் தனியே விட்டு விடுங்கள்..!

காலம் என்னை துரத்தும் போது
கவலைகள் என்னை முடக்கும் போது
வாழ்வே சூனிய மான போது
வழியற்று நானும் போன போது

என்னைத் தனியே விட்டு விடுங்கள்..!
ஏக்கம் தீர புலம்ப விடுங்கள்…

எதிரிகள் என்னைச் சூழ்ந்த போது
நண்பர்கள் முதுகில் குத்திய போது
நம்பிக்கையற்றுப் போன போது
நாளை இல்லையென் றான போது

என்னைத் தனியே விட்டு விடுங்கள்..!
ஏக்கம் தீர புலம்ப விடுங்கள்…

தொட்டவை எல்லாம் தோற்றபோது
தோல்விகள் என்னை முடக்கிய போது
உறவுகள் கைவிட்டு விலகிய போது
ஒருவரும் இல்லையென் றான போது..

என்னைத் தனியே விட்டு விடுங்கள்..!
ஏக்கம் தீர புலம்ப விடுங்கள்…



Sumankavi

சாவி தயாரிப்பவன்

Previous Post Next Post

Contact Form