ரெட்டை இலக்க வளர்ச்சி வேணும், ஜோசியம் பாத்து சொல்லுங்க..!

ரெட்டை இலக்க வளர்ச்சி வேணும்,
ஜோசியம் பாத்து சொல்லுங்க - பண்டிட்
ஜோசியம் பாத்து சொல்லுங்க…
பெண்களை பாது காத்திட எனக்கோர்,
பரிகாரத்தை சொல்லுங்க..! - நல்ல
பரிகாரத்தை சொல்லுங்க..!

கஜானாவை நான் நிரப்பியாகணும்,
காலத்தை கணித்து சொல்லுங்க…
வருடத்துக் காறு சிலிண்டர் கொடுக்கணும்
வாய்ப்பிருக்கான்னு சொல்லுங்க - பண்டிட்
வாய்ப்பிருக்கானு சொல்லுங்க…

ரெட்டை இலக்க வளர்ச்சி வேணும்,
ஜோசியம் பாத்து சொல்லுங்க - பண்டிட்
ஜோசியம் பாத்து சொல்லுங்க..!

ஊழலை ஒழிக்க வழியிருக்கான்னு
சோழி போட்டு சொல்லுங்க..!
மாமன் சீரை வழங்கிட ஏதும்,
லாட்டரி விழுமா சொல்லுங்க - மார்ட்டின்
லாட்டரி விழுமா சொல்லுங்க…

ரெட்டை இலக்க வளர்ச்சி வேணும்
ஜோசியம் பாத்து சொல்லுங்க - பண்டிட்
ஜோசியம் பாத்து சொல்லுங்க..!
முட்டாள் மக்கள் இருக்கிற வரையில்
ஜோசியம் மட்டுமே போதுங்க..! - ஒங்க
ஜோசியம் மட்டுமே போதுங்க..!



Sumankavi

சாவி தயாரிப்பவன்

Previous Post Next Post

Contact Form