நீ தூய சக்தியா? - இல்ல ஒருஜினல் தீயசக்தியா..?

நீ தூய சக்தியா? - இல்ல
ஒருஜினல் தீயசக்தியா..?
மாற்று கட்சிய ஒடைக்கிற…
ஆசை வார்த்தைய வெதைக்கிற…
கோடிகோடியா எறைக்கிற…
குதிர பேரத்த நடத்துற...

நீ தூய சக்தியா? - இல்ல
ஒருஜினல் தீய சக்தியா..?

ஊழல் சக்தீன்னு பேசுன…
மற்றும் பலருன்னு மாற்றுன…
ஊழல் வாக்குகள் போட்டுதான் - இந்த
அரசு நீடிக்க வேணுமா..?
காவி கும்பலின் வாக்குகள் - அந்த
அடிமை கூட்டத்தில் இல்லையா..?
எச்சிப் பிழைப்புக்குப் பேருதான்
தூய அரசியல் கொள்கையா..?

நீ தூய சக்தியா? - இல்ல
ஒருஜினல் தீய சக்தியா..?

அண்ணா, பெரியார் என்பதும்…
பின்னால் ஜோதிடம் பார்ப்பதும்…
சாதிவெறியனைக் கட்சியில்,
சத்தமில்லாமல் சேர்ப்பதும்…
லாட்டரி திருடர்கள் கைகளில்,
நாட்டைத் தாரை வார்ப்பதும்,
தூய சக்தியின் வேலையா? - இது
தூய சக்தியின் வேலையா?

நீ தூய சக்தியா? - இல்ல
ஒருஜினல் தீய சக்தியா..?



Sumankavi

சாவி தயாரிப்பவன்

Previous Post Next Post

Contact Form