தென்னமரத்துல ஒரு குத்து..!

 தென்னமரத்துல ஒரு குத்து.

ஏணி சின்னத்தில் ஒரு குத்து.
திராவிடத்தில் ஒரு குத்து.
பாசிசத்தில் ஒரு குத்து.
பெரியாருக்கும் ஒரு குத்து.
பெரியவாக்கும் ஒரு குத்து.

ரெண்டுபக்கம் குத்துற,
கள்ள வோட்டு தாண்டா..!
தமிழ்த்தாய பின்னுக்கு
தள்ளி விட்டுட் டாண்டா..!

ஆரம்பமே அலப்பற..!
அணில் குஞ்சுகள் அரைகொற..!
செய்றததான் சொல்லுவோன்னு
சொன்ன கத போச்சு…
கஜானாவில் காசில்லன்னு
கதற தொடங்கி யாச்சு..!

தாய்மாமன் சீருக்கு
தங்கமில்ல பாசு..!
வருசத்துகு ஆறு சிலிண்டர்
வாய்ப்பில்ல பாசு..!

தென்னமரத்துல ஒரு குத்து.
ஏணி சின்னத்தில் ஒரு குத்து.
திராவிடத்தில் ஒரு குத்து.
பாசிசத்தில் ஒரு குத்து.

வள்ளுவரு ஒரு பக்கம்..!
மனுதர்மம் மறுபக்கம்..!
சமநீதி ஒரு பக்கம்…!
சனாதனம் மறுபக்கம்..!
அம்பேத்கர் ஒரு பக்கம்..!
சாவர்கர் மறுபக்கம்..!

ரெண்டுபக்கம் குத்துற,
கள்ள வோட்டு தாண்டா..!
தமிழ்த்தாய பின்னுக்கு,
தள்ளி விட்டுட் டாண்டா..!




Sumankavi

சாவி தயாரிப்பவன்

Previous Post Next Post

Contact Form