அசையா பொருளும் அசைகிறது...

அசையா பொருளும் அசைகிறது.
நகரா பொருளும் நகர்கிறது.
காலத்தின் வேகத்தில் சுழல்கிறது. - (அவை
காலத்தின் வேகத்தில் சுழல்கிறது.)

அசையா பொருளும் அசைகிறது.
நகரா பொருளும் நகர்கிறது.
காலத்தின் வேகத்தில் சுழல்கிறது. - (அவை
காலத்தின் வேகத்தில் சுழல்கிறது.)

ஓடாமல் நின்ற தேர்கூட மெல்ல,
காலத்தின் ஓட்டத்தில் ஓடுதடா..! - அது
மரமாய் மக்கிப் போகுதடா..!
ஓடாமல் தேங்கிய நீர்கூட மெல்ல,
காலத்தின் ஓட்டத்தில் ஓடுதடா..! - அது
காய்ந்து வரண்டு போகுதடா..!
இயக்கமற்று இருப்பதில் கூட,
இயக்கம் ஒன்று நடக்குதடா..! - அது
இழுத்துக் கொண்டே கடக்குதடா..! - நம்மை
இழுத்துக் கொண்டே கடக்குதடா..!

அசையா பொருளும் அசைகிறது
நகரா பொருளும் நகர்கிறது
காலத்தின் வேகத்தில் சுழல்கிறது - (அவை
காலத்தின் வேகத்தில் சுழல்கிறது)

காலம் கடப்பது தெரியாமல், - நீ
கல்லைப் போல கிடக்கின்றாய். - நீ
கல்லைப் போல கிடக்கின்றாய்.
போனவை மீண்டும் திரும்பாது,
என்பதை உணர மறுக்கின்றாய். - இந்த
உண்மையை உணர மறுக்கின்றாய்.
எல்லாம் கடந்து போனபின்னே, - நீ
ஏங்கிச் சாவதில் பொருளில்லை. - நீ
ஏங்கிச் சாவதில் பொருளில்லை.
இன்றே வாழத் தொடங்கிவிடு... - உன்
வேலையை இன்றே தொடங்கிவிடு...

அசையா பொருளும் அசைகிறது
நகரா பொருளும் நகர்கிறது
காலத்தின் வேகத்தில் சுழல்கிறது - அவை
காலத்தின் வேகத்தில் சுழல்கிறது



Sumankavi

சாவி தயாரிப்பவன்

Previous Post Next Post

Contact Form