கல்யாண வீட்டில் சுற்றி வரும் ஒய்யாரமான சுந்தரியே ..!

கல்யாண வீட்டில் சுற்றி வரும்
ஒய்யாரமான சுந்தரியே - அடி
ஒய்யாரமான சுந்தரியே
எல்லோரின் மனசையும் அள்ளுறியே - நீ
என்னைய மட்டும் கிள்ளுறியே ..! - உன்
புன்னகையால கொல்லுறியே..!

கல்யாண வீட்டில் சுற்றி வரும்
ஒய்யாரமான சுந்தரியே - அடி
ஒய்யாரமான சுந்தரியே

பட்டுப் பாவாடை தாவணியில் - நீ
சிட்டு போல சிரித்து வர .
சுற்றி வட்ட மடிக்கின்றேன்
காணாதபோது துடிக்கின்றேன் - உனைக்
காணாதபோது துடிக்கின்றேன்..!
மேள தாளம் கேட்கிறது - அது
நமக்கோ என்று நினைக்கின்றேன் - ஆம்
நமக்கோ என்று நினைக்கின்றேன்
- இது
அடுத்தவன் திருமணம் என்பதையே
அந்தப் பொழுதில் மறக்கின்றேன் - நான்
அந்தப் பொழுதில் மறக்கின்றேன்..!

கல்யாண வீட்டில் சுற்றி வரும்
ஒய்யாரமான சுந்தரியே - அடி
ஒய்யாரமான சுந்தரியே
எல்லோரின் மனசையும் அள்ளுறியே - நீ
என்னைய மட்டும் கிள்ளுறியே ..! - உன்
புன்னகையால கொல்லுறியே..!

தோழிகளோடு பேசுகிறாய் - உன்
பார்வையை என் மேல் வீசுகிறாய்
உன் பேச்சு அங்கே நடக்கிறது
உன் பார்வை என் மேல் கிடக்கிறது
ஐஸ்க்ரீ மைப்போல் உருகுகிறேன் - உன்
விழிகள் படபட உருகுகிறேன்
நாளை எப்படி காண்பதென
நினைத்து எனக்குள் மருகுகிறேன்
நினைத்து எனக்குள் மருகுகிறேன்..!

கல்யாண வீட்டில் சுற்றி வரும்
ஒய்யாரமான சுந்தரியே - அடி
ஒய்யாரமான சுந்தரியே
எல்லோரின் மனசையும் அள்ளுறியே - நீ
என்னைய மட்டும் கிள்ளுறியே ..! - உன்
புன்னகையால கொல்லுறியே..!


Sumankavi

சாவி தயாரிப்பவன்

Previous Post Next Post

Contact Form