ஆதரவ தேடித் தேடி அலுத்துப் போனியா..!

ஆதரவ தேடித் தேடி
அலுத்துப் போனியா..!
தோல்விகளால் வாழ்க்கையையே
வெறுத்துப் போனியா..!
ஆறுதலாய் பேச ஒரு ஆளுமில்லையா..! - நீ
அழுது புலம்பாத ஒரு நாளுமில்லையா..!
ஒன்னத் தவிர ஒனக்குன்னு யாருமில்லடா..! - நீ
விழுந்தாக்க தூக்கிவிட யாருமில்லடா..!

ஆதரவ தேடித் தேடி
அலுத்துப் போனியா..!
தோல்விகளால் வாழ்க்கையையே
வெறுத்துப் போனியா..! - நண்பா
வெறுத்துப் போனியா..!

பணமிருந்தா பங்கு போட நூறு பேருடா.
பசியிருந்தா பந்தி போட யாருமில்லடா.
வசதியாக நீயிருந்தா வந்து நிற்பவன்,
அசதியிலே நீவிழுந்தால் வருவதில்லடா - நண்பா
அசதியிலே நீவிழுந்தால் வருவதில்லடா.
தாகமென்று நீகேட்டால் தண்ணியில்லடா.
சோகமென்று நீயிருந்தால் சொந்தமில்லடா.
எல்லாமே நிறைந்திருந்தால் கூட்டமிருக்கும்.
முற்றிலுமாய் வற்றிவிட்டால் ஓட்டமெடுக்கும். - உன்
கூட உள்ள கூட்டமெலாம் ஓட்டமெடுக்கும்..!

ஆதரவ தேடித் தேடி
அலுத்துப் போனியா..!
தோல்விகளால் வாழ்க்கையையே
வெறுத்துப் போனியா..!
ஆறுதலாய் பேச ஒரு ஆளுமில்லையா..! - நீ
அழுது புலம்பாத ஒரு நாளுமில்லையா..!
ஒன்னத் தவிர ஒனக்குன்னு யாருமில்லடா..! - நீ
விழுந்தாக்க தூக்கிவிட யாருமில்லடா..!

முன்னேறத் துடித்தபோது தள்ளிவிட்டவன்.
தள்ளாடி எழுந்தபோது தள்ளிப்போனவன்.
படிப்படியா வளர்ந்தபோது பதறிப்போனவன். - நீ
வென்றுவிட்டால் சொந்தமென சொல்லிக் கொள்ளுவான் - உன்
வெற்றியையே தனதென்று அள்ளிக் கொள்ளுவான் - உன்
வெற்றியையே தனதென்று அள்ளிக் கொள்ளுவான்.
ஏற்றத்திலே எவரையும்நீ நம்பிவிடாதே...!
தோற்றுவிட்டால் அதற்காக வெம்பிவிடாதே..! - நீ
தோற்றுவிட்டால் அதற்காக வெம்பிவிடாதே..!

ஆதரவ தேடித் தேடி
அலுத்துப் போனியா..!
தோல்விகளால் வாழ்க்கையையே
வெறுத்துப் போனியா..!
ஆறுதலாய் பேச ஒரு ஆளுமில்லையா..! - நீ
அழுது புலம்பாத ஒரு நாளுமில்லையா..!
ஒன்னத் தவிர ஒனக்குன்னு யாருமில்லடா..! - நீ
விழுந்தாக்க தூக்கிவிட யாருமில்லடா..! - உனக்கு
யாருமில்லடா..!

Sumankavi

சாவி தயாரிப்பவன்

Previous Post Next Post

Contact Form